Categories: Cinema News latest news

எப்பவும் போல உளறி விஜயிடம் மாட்டிக் கொண்ட வெங்கட்பிரபு!.. தளபதி 68 முடியறதுக்குள்ள என்னென்ன நடக்குமோ!…

தற்போது விஜய் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இரண்டாவது முறையாக லோகேஷுடன் கூட்டணி  அமைத்திருக்கும் விஜயின் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப் படம் உலகெங்கிலும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த பரபரப்புக்கு இடையிலும் விஜயின் அடுத்தப்படமான தளபதி 68 படத்தின் அப்டேட்டும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் வெங்கட் பிரபு தளபதி 68 படத்தை பற்றிய பேச்சு ஆரம்பித்ததில் இருந்தே ஏதாவது உளறிக் கொண்டே இருந்தார். அதை ரசிகர்கள் உட்பட பத்திரிக்கையாளர்களும் ஒரு ஆர்வக்கோளாறில் பேசி கொண்டுஇருக்கிறார் என கூறி வந்தார்கள்.

இதில் விஜய் வெங்கட் பிரபுவை அழைத்து லெஃப்ட் ரைட் வாங்கினார் என்று சொல்லப்பட்டு வந்தது. அதில் இருந்தே வெங்கட் பிரபு தளபதி 68 படத்தை பற்றி வாய்திறக்காமலேயே இருந்து வந்தார்.

ஆனால் சமீபத்தில் அடியே திரைப்படத்தின் புரோமோஷன் விழாவில் கலந்து கொண்டு பேசிய வெங்கட் பிரபுவிடம் எப்பவும் போல தளபதி 68 படத்தி யார் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்கள் என்று கேட்டனர்.

அதற்கு வெங்கட் பிரபு சாமர்த்தியமாக பதில் சொல்கிறேன் என்ற பேர் வழியில் கண்டிப்பாக நயன், கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகியோர் நடிக்க மாட்டார்கள் என்று கூறினார். இவர் சொல்வதில் இருந்து இந்த மூன்று நடிகைகள் கண்டிப்பாக இருக்காது என தெரிகிறது.

இதுவே ஒரு ஹிண்ட் போல கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு. இவர் சொல்லாமல்  இருந்தாலாவது யாரா இருக்கும் என ஒரு எதிர்பார்ப்பிலேயே இருந்திருக்கும். ஆனால் இவர்கள் இல்லை என்று சொல்வதில் இருந்து கொஞ்சம் ரசிகர்கள் நிம்மதியடைந்திருக்கின்றனர்.

ஆனால் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதால் ஒரு விஜய்க்கு ஜோடியாக கண்டிப்பாக ஜோதிகா நடிக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.

 

Published by
Rohini