நெப்போட்டிசத்தின் மறு உருவம்தான் ‘கோட்’! ரசிகரின் கமெண்டுக்கு vp கொடுத்த பதிலடி

by Rohini |   ( Updated:2024-08-30 07:07:02  )
goat 1
X

goat 1

Goat Movie:விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் கோட். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி. மோகன். யோகி பாபு உட்பட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. படத்தின் மூன்று பாடல்களும் வெளியான நிலையில் ஒரு பாடல் கூட ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் படத்தைப் பற்றி அவ்வப்போது வெங்கட் பிரபு சில தகவல்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: சேலையில் குத்துவிளக்கா இருந்தாங்க.. மாடர்ன் டிரெஸில் சிவகார்த்திகேயன் மனைவி!

அப்பா மகன் என இரு வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த கோட் திரைப்படம் ஒரு முழு ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கிறது. இன்னும் 6 நாட்கள் உள்ள நிலையில் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்றிலிருந்து தொடங்கி இருக்கிறது. இதில் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பம் மூலம் நடிப்பதால் இன்னும் இந்த படத்தின் மீது அதிக வரவேற்பு இருக்கிறது.

இந்த நிலையில் கோட் திரைப்படத்தைப் பற்றி ரசிகர் ஒருவர் அவருடைய இணையதள பக்கத்தில் ஒரு கமெண்டை பதிவிட்டு இருக்கிறார். அதற்கு வெங்கட் பிரபு கொடுத்த தக் லைஃப் பதில் தான் வைரலாகி வருகின்றது. அதாவது சினிமாவை பொருத்தவரைக்கும் நெப்போடிசம் என்பது அதிகமாகவே இருப்பதாக கூறுகிறார்கள்.

vp

vp

வாரிசு நடிகர்கள் மட்டுமே இந்த சினிமாவில் ஈசியாக நுழைந்து விடுகின்றனர் என்ற ஒரு கருத்து பரவலாக பேசப்படுவது உண்டு. அந்த வகையில் கோட் திரைப்படத்திலும் அப்படி ஒரு நெப்போட்டிசம் உள்ள நடிகர்கள்தான் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக அந்த ரசிகர் ‘எஸ் ஏ சந்திரசேகர் பையன், கங்கை அமரன் பசங்க, இளையராஜா பையன், கல்பாத்தி பொண்ணு, தியாகராஜன் பையன், சுந்தரம் மாஸ்டர் பையன் இணைந்து மிரட்டும் கோட் திரைப்படம்’ என பதிவிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: கோட் படம் ஓடிடியில் இப்படிதான் வெளியாகும்… சர்ப்ரைஸ் கொடுத்த வெங்கட் பிரபு

இதற்கு பதில் அளிக்கும் விதமாக வெங்கட் பிரபு ‘நன்றி ப்ரோ. உங்க அப்பா பெயரையும் சொல்லுங்க. அவருக்கும் நான் நன்றி சொல்கிறேன் ’என கூறியிருக்கிறார் .அதாவது இவர் சொன்னதிலிருந்து எந்த ஒரு மனிதனும் தானாக வந்துவிடுவதில்லை என்பதை உணர்த்தும் விதமாக பதில் அளித்திருக்கிறார் வெங்கட் பிரபு.

Next Story