படம் எடுத்தவன்கிட்டயே இந்த கேள்வியா? வெங்கட் பிரபு கொடுத்த ஃபன் ரிப்ளே
Venkat Prabhu: இன்று உலகெங்கிலும் விஜய் நடிப்பில் தயாரான கோட் திரைப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஏஜிஎஸ் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக இந்த படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது.
தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் அதிகாலை கட்சியாக நான்கு மணி அளவில் இந்த படம் ரிலீஸ் ஆகி இருக்கின்றது. தமிழ்நாட்டில் மட்டும் 9 மணி என சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருக்கிறது தமிழக அரசு. படத்தைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ரியல் மங்காத்தா ஆடுனது நம்ம வெங்கட் பிரபுதான்… கோட் படத்தின் Honest Review
படத்தையும் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள். படத்தில் இருக்கும் சர்ப்ரைஸ்கள் ட்விஸ்ட்கள் என ஒவ்வொன்றாக விவரித்து ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்து வருகிறார்கள். அந்த அளவுக்கு கோட் திரைப்படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தியதாகவே அமைந்திருக்கிறது.
ரசிகர்கள் ஒரு பக்கம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க எந்த அளவு முண்டியடித்து வருகின்றனரோ அதைப்போல ஒரு சில பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஆர்வமுடன் வந்த பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: போனதும் சேலைய பிடிச்சு இழுத்து! கலைஞர் பேர் சொன்னதும் கதிகலங்கிய கும்பல்.. யார் அந்த நடிகை?
அதில் கீர்த்தி சுரேஷ் கோட் திரைப்படத்தை பார்க்க வந்த வீடியோ வைரலானது. அதைப்போல த்ரிஷா சிவகார்த்திகேயன் உட்பட பல பிரபலங்கள் படத்தை பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிலையில் கமலா தியேட்டருக்கு படத்தை பார்க்க வந்த வெங்கட் பிரபுவிடம் நிருபர் ஒருவர் ‘படத்தின் முதல் பாதி எந்த அளவு ரசிகர்களிடம் ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது’ எனக்கேட்டார்.
ஆனால் இதை வெங்கட் பிரபு தவறாக புரிந்து கொண்டு அதாவது ‘படத்தின் முதல் பாதி எந்த அளவுக்கு வந்திருக்கிறது என தன்னிடம் கேட்டதாக நினைத்துக் கொண்ட வெங்கட் பிரபு ‘இந்த படத்தை எடுத்தவனே நான் தான். என்கிட்ட இந்த கேள்வியா? நீங்க போய் படத்தை பார்த்து முதல்ல சொல்லுங்க’ என பதில் கொடுத்தார்.
இதையும் படிங்க: இதுதான் ஆயிரம் கோடி வசூல் பண்ணுமா?!. சும்மா இருங்கடா!.. விபி-யை வச்சி செய்யும் ஃபேன்ஸ்!
அதற்கு அந்த நிருபர் ‘இல்லை ரசிகர்களிடம் முதல் பாதி எந்த அளவு ரெஸ்பான்ஸ் பெற்று இருக்கிறது’ என கேட்கிறேன் என விளக்கம் அளித்தார். அதற்கு வெங்கட் பிரபு ‘அதையும் நீங்கள்தான் கேட்டு சொல்ல வேண்டும். ரசிகர்களிடம் போய் கேளுங்கள். எந்த அளவுக்கு படம் பிடித்திருக்கிறது என’ என்று கூறினார். மேலும் வெங்கட் பிரபு கூறும்போது நேற்று இரவே அஜித் எனக்கு போன் செய்து வாழ்த்து சொன்னதாகவும் அவர் மிகவும் ஹாப்பியாக இருக்கிறார் என்றும் கூறினார் வெங்கட் பிரபு.