கடந்த 2021 ஆம் ஆண்டு சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்சன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “மாநாடு”. இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
“டைம் லூப்” அம்சத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், தமிழ் ரசிகர்களுக்கு புதுமையான ஒன்றாக இருந்தது. மேலும் சிம்பு கேரியரில் மிகவும் திருப்புமுனை வாய்ந்த வெற்றியாக இத்திரைப்படம் அமைந்தது.
இந்த நிலையில் “மாநாடு” திரைப்படத்தின் கதையை பத்து வருடங்களுக்கு முன்பே வெங்கட் பிரபு விஜய்யிடம் கூறியுள்ளாராம். இது குறித்து ஒரு சுவாரஸ்ய தகவலை இப்போது பார்க்கலாம்.
அஜித்குமாரின் 50 ஆவது திரைப்படமான “மங்காத்தா” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், வெங்கட் பிரபுவை அழைத்து பாராட்டினாராம். மேலும் வெங்கட் பிரபுவிடம் “அர்ஜூன் கதாப்பாத்திரத்தை நீங்கள் என்னிடம் கொண்டுவந்திருக்கலாம். நிச்சயமாக நான் நடித்திருப்பேன்” எனவும் கூறினாராம்.
இதையும் படிங்க: கண்டாரா படத்தில் முதலில் ஒப்பந்தமான சூப்பர் ஸ்டார் நடிகர்… இது தெரியாம போச்சே!!
அதனை தொடர்ந்து விஜய் “எனக்காக ஒரு கதை கூறுங்கள்” என கேட்டிருக்கிறார். அதற்கு வெங்கட்பிரபு “மாநாடு” திரைப்படத்தின் கதையை கூறியுள்ளார். ஆனால் சில காரணங்களால் அத்திரைப்படத்தில் விஜய் நடிக்கமுடியாமல் போனதாம்.
மேலும் அந்த காலத்தில் அது போன்ற டைம் டிராவல் அம்சம் கொண்ட திரைப்படத்தை ரசிகர்கள் வரவேற்பதற்கான சூழல் இல்லை எனவும் சிந்தித்தாராம் வெங்கட் பிரபு. இதனை தொடர்ந்துதான் கடந்த 2021 ஆம் ஆண்டு சிம்புவை வைத்து “மாநாடு” திரைப்படத்தை இயக்கினாராம் வெங்கட் பிரபு.
நடிகர் கவின்…
90களில் தமிழ்…
Soodhu kavvum2:…
அமரன் திரைப்படத்தை…
நடிகர் சிவகார்த்திகேயன்…