நான் தமிழ் இயக்குனர்., கண்டிப்பா அத பண்ணுவாங்க.. உண்மையை உளறிய வெங்கட் பிரபு.!
மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்த அடுத்ததாக, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மன்மதலீலை எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த வாரம் ஏப்ரல் 1ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. அடல்ட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாவே உள்ளது.
இப்படத்தை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் எந்த படம் உருவாகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால்,அவர் தற்போது தமிழை தாண்டி தெலுங்கு பக்கம் போய்விட்டார். ஒருவேளை மாநாடு படத்தின் ரீமேக்கா என விசாரிக்கையில்,
அதனை அவரே மறுத்துள்ளார். ஆம், அடுத்து தெலுங்கு படத்தை இயக்குவது உண்மை தான் ஆனால், அது புது கதைக்களம் என்பதை விளக்கியுள்ளார். இந்த படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்க உள்ளாராம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படியுங்களேன் - இனி நான் அந்த பக்கமே போக மாட்டேன்.! விஜய் எடுத்த அதிரடி முடிவு.!
இப்படத்தை பற்றி மேலும் கூறுகையில், இது ஒரு தெலுங்கு படமாகவே உருவாகும். ஆனால் நான் தமிழ் இயக்குனர் என்பதால், தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தமிழ் தெலுங்கு என இரு மொழிபடமாகவே விளம்பரப்படுத்தும் என வெளிப்படையாக குறிப்பிட்டார். விரைவில் இப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.