பா. ரஞ்சித் தயாரிப்பில் பல படங்கள் இந்த ஆண்டு உருவாகி வருகிறது. கடந்த மாதம் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், ஒரு மார்ச் 8ம் தேதி ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள ஜே. பேபி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் கோட் படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு கலந்துக் கொண்டு பா. ரஞ்சித்தை பாராட்டி பேசியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படம் உருவானது. அந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் பா. ரஞ்சித்.
இதையும் படிங்க: கில்லியில ஆரம்பிச்சது!.. கோட் வரைக்கும் மகேஷ் பாபுவை காப்பியடிக்கிறதை விடலையே விஜய்?..
கோவா படத்திலும் வெங்கட் பிரபுவுக்கு உதவி இயக்குநராக பா. ரஞ்சித் பணியாற்றினார். செளந்தர்யா ரஜினிகாந்த் கோவா படத்தை தயாரித்த நிலையில், அப்படியே அவரிடம் கதை சொல்லி சூப்பர் ஸ்டாரை வைத்து கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.
கபாலி மற்றும் காலா என அடுத்தடுத்து தொடர்ந்து 2 படங்களை இயக்கி மிகப்பெரிய இயக்குநராக பா. ரஞ்சித் மாறி விட்டார். இந்த ஆண்டு அவர் இயக்கத்தில் உருவாகி உள்ள தங்கலான் படம் சம்மருக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கோட் பட இசையமைப்பாளருக்கு கொக்கிப் போட்ட காடுவெட்டி ஹீரோ!.. இதுல யாரு சொல்றதுப்பா நிஜம்?..
இந்நிலையில், பா. ரஞ்சித் டீமில் இருந்த வந்த சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள ஜே. பேபி படம் வெளியாக போகிறது.
அதன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய வெங்கட் பிரபு பா. ரஞ்சித் பாய்ஸ் என பலர் உருவாகி வருகின்றனர். ஆனால், பா. ரஞ்சித்தே விபி பாய் தான் எனக் கூறினார். மேலும், அவர் தனக்கென தனி உலகத்தையே உருவாக்கி சொல்ல வரும் கருத்துக்களை தைரியமாக சொல்லி வருகிறார் என பாராட்டி உள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…