இததான் விஜய் ஆரம்பத்திலேயே சொன்னாரு! நிருபர் கேட்ட கேள்வியால் ஆவேசமான வெங்கட் பிரபு
Actor Vijay: விஜய் அரசியல் ஆரம்பித்த பிறகு சினிமா வேறு அரசியல் வேறு என்ற கருத்தில் அவர் உறுதியாக இருக்கிறார். கோட் படத்தின் ப்ரோமோஷனிலோ அது சம்பந்தமான எந்த விழாவானாலும் தன்னுடைய அரசியல் சம்பந்தமான எதையும் பேசக்கூடாது என்றும் தனது கட்சி பெயரைக் கூட பயன்படுத்தக்கூடாது என்றும் தன்னுடைய ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் விஜய் கட்டளையிட்டு இருந்தார்.
ஆனால் அவர் சொன்னதையும் மீறி அவருடைய அரசியல் சம்பந்தமான கேள்விகளை டிரெய்லர் வெளியீட்டு விழாவில் வெங்கட் பிரபுவிடம் நிருபர்கள் கேட்டனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் கோட். செப்டம்பர் ஐந்தாம் தேதி இந்த படம் உலகெங்கிலும் ரிலீஸ் ஆக இருக்கின்றது. நேற்று இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இதையும் படிங்க: ‘கோட்’ படத்தின் டிரெய்லரில் காட்டாத முக்கிய பிரபலங்கள்! எங்க கிட்ட இருந்து தப்ப முடியுமா?
ஏற்கனவே கோட் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த டிரெய்லர் அமைந்துள்ளது. டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ,இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் ஒரு சில நடிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது நிருபர் ஒருவர் வெங்கட் பிரபுவிடம் ஒரு கட்சியின் தலைவரை உங்கள் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
அப்படி பார்த்தால் உங்கள் வீட்டில் இருந்து யாராவது அந்த கட்சிக்கு எம்எல்ஏவாக போக வாய்ப்பு இருக்கிறதா என்ற ஒரு கேள்வியை கேட்டனர். அதைக் கேட்டதும் வெங்கட் பிரபு கொஞ்சம் அதிர்ச்சியாகி ‘இதைத்தான் விஜய் அப்பவே சொல்லி இருக்கிறார். கட்சி சம்பந்தமான எதையும் பேசக் கூடாது’ என என்று கூறினார். ஆனால் அந்த பத்திரிக்கையாளர் ‘நான் உங்கள் வீட்டில் இருந்து அந்த கட்சிக்கு போவீர்களா என்று தான் கேட்கிறேன்’ என கேட்டார்.
இதையும் படிங்க: விஜயால் பொங்கினாரா அஜித் இயக்குனர்.. நடந்ததே வேற? இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல!
அதற்கு வெங்கட் பிரபு எங்கள் வீட்டில் இருந்து எந்த கட்சிக்கும் நாங்கள் செல்வோம். அதை பற்றி உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. உங்கள் வீட்டில் ஏதாவது பிரச்சனை என்றால் நான் கேட்கிறேனா? அப்புறம் ஏன் என் வீட்டில் நடக்கும் பிரச்சினையைப் பற்றி கேட்கிறீர்கள்? அதையும் மீறி உங்களுக்கு பதில் வேண்டும் என்றால் அந்த கட்சிக்கு பிரேம்ஜி கண்டிப்பாக செல்வார் என கிண்டலாக பதில் அளித்திருந்தார் வெங்கட் பிரபு.