விஜயை வச்சு பக்கா ப்ளான் போடும் வெங்கட் பிரபு! இதுக்கெல்லாம் இனி அசரவே மாட்டாரு நம்ம தளபதி

Published on: August 28, 2023
prabhu
---Advertisement---

லியோ படத்தை விட விஜய் – வெங்கட் பிரபு இணையும்  ‘தளபதி’ 68 படத்தை பற்றி தான் சமூக ஊடகங்களில் அடிக்கடி பேச்சு அடிபட்டு வருகிறது. லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது தளபதி 68. அந்தளவுக்கு பெரிய ஹைப் தளபதி 68 படத்தின் மீது அமைந்திருக்கிறது.

சமீபகாலமாகவே அனைத்து படங்களும் ஒரு பேன் இந்திய படங்களாகவும் மல்டி ஸ்டாரர் படங்களுமாகவும் இருப்பதால் வெங்கட் பிரபுவும் தளபதி 68 படத்தை இன்னும் பெரிய அளவில் கொண்டு போக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஊத்திக்கொடுத்த முதல் புருஷன்… குடியால் கெட்ட வாழ்க்கை… மனம் திறக்கும் ஊர்வசி..!

அதுமட்டுமில்லாமல் ஒரு ஆழமான சமூக கருத்தை இந்த படத்தின் மூலம் வெங்கட் பிரபு சொல்வதற்கு முயற்சிக்கிறார் என்றும் அதற்கு விஜயை தயார் படுத்துவார் என்றும் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் விஜயின் வருங்கால அரசியல் கருத்தை பற்றி கண்டிப்பாக இந்தப் படத்தில் வெங்கட் பிரபு பேசுவார் என்றும் சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக அது எந்த மாதிரியான கதை என்பதை தன்னுடன் இருக்கும் உதவியாளர்களுக்கும் தெரிய கூடாது என்பதில் வெங்கட் பிரபு கவனமாக இருக்கிறாராம். படத்தில் இரண்டு விஜய். ஜோதிகா மற்றும் பிரியங்கா மோகன் இவர்கள் தான் ஜோடி. மற்றபடி ஒன்லைன் கதையை தவிர வேறு எதுவும் தெரிய கூடாது என மிகவும் கவனமாக இருக்கிறாராம் வெங்கட் பிரபு.

விஜயும் இப்போது அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருவதால் இந்தப் படத்தில் தாராளமாக அரசியல் வசனங்களை சும்மா தெறிச்சு விடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.  மாநாடு  படத்தில் கூட ஒரு முதலமைச்சரை சுட்டுக் கொல்வது இதுதான் ஒன்லைனாக சொல்லியிருந்தாராம் வெங்கட் பிரபு. மற்ற படி அந்த டைம் லூப் எல்லாம் சூட்டிங்கில் எடுக்கும் போதுதான் அவரது உதவியாளர்களுக்கே தெரியுமாம். அந்தப் படம் எந்தளவுக்கு வெற்றி என அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இதையும் படிங்க : தம்பிக்காக ஹாலிவுட் தரத்தில் அதகளம் செய்யும் மோகன்ராஜா! ‘தனி ஒருவன் 2’க்காக இப்படி ஒரு புரோமோவா?

அதே போல் தான் தளபதி 68லும் ஒரு பெரிய சம்பவத்தை விஜயை வைத்து வெங்கட் பிரபு செய்யக் காத்திருக்கிறார் என்று பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார். படத்திற்கு கூடுதல் ப்ளஸ் விஜயுடன் இணைந்து மாதவன் நடிக்கிறார் என்பது. மாதவன் உள்ளே வருகிறார் என்றால் கண்டிப்பாக ஒரு பலமான கதையாகத்தான் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் நடிகர் ஜெய், பிரேம்ஜி நடிக்கிறார்கள். ஏற்கனவே யுவன் இசையமைக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் யுவனுடன் தமனும் சேர்ந்து தளபதி 68 படத்திற்கு இசையமைக்கிறார் என்று செய்யாறு பாலு கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.