அந்த கேரக்டரை ச்சீ என்று கழுவி ஊற்றிய விமர்சகர்கள் :: புலம்பும் இயக்குனர்
இன்று சினிமா ரசிகர்களும், விமர்சகர்களும் நல்ல படங்களை வரவேற்கின்றனர். ஒரு நடிகர் நன்றாக நடித்தால் அவரை கொண்டாடுகிறார்கள். அதே நேரத்தில் ஒரு பெரிய நடிகர் மோசமாக நடித்தால் அதை விமர்சிக்கவும் தயங்குவதில்லை.
ஆனால், இயக்குனர் வெங்கட்பிரபு தன்னுடைய படத்தில் நன்றாக நடித்த நடிகருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என கூறியுள்ளார். சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான பாவக்கதைகள் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மொத்தம் நான்கு கதைகளை நான்கு இயக்குனர்கள் இயக்கியிருந்தார்.
குறிப்பாக சுதா கொங்கரா இயக்கியிருந்த 'தங்கம்' என்ற படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், ஜி.வி.பிரகாஷ் குமாரின் தங்கை பவானி ஸ்ரீ, சாந்தனு ஆகியோர் நடித்திருந்தனர். இதில் திருநங்கை வேடத்தில் நடித்த காளிதாசுக்கு பாராட்டுக்கள் குவிந்தது.
இந்நிலையில், இப்படத்திற்காக சமீபத்தில் சிறந்த துணை நடிகருக்கான சைமா விருதை வென்றார் காளிதாஸ். இதற்கு பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இயக்குனர் வெங்கட்பிரபு, 'இப்போதுள்ள விமர்சகர்கள் கோவா படம் வெளியாகும்போது இருந்திருக்க வேண்டும்.
கோவா படத்தில் திருநங்கையாக அடித்த சம்பத் கேரக்டருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவரை யாரும் பாராட்டவில்லை. அந்த கேரக்டரை விமர்சகர்கள் ச்சீ என்றார்கள். தற்போது காளிதாசுக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சியே என கூறியுள்ளார்.
இதேபோல் வெங்கட்பிரபு, சில வருடங்களுக்கு முன்னாள் தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில், மங்காத்தா படத்தின் இசையமைப்பாளர் பெயர் நாமினி லிஸ்டில் கூட ஏன் இடம்பெறவில்லை என மேடையில் வைத்து அனைவர் முன்னிலையிலும் கேட்டது குறிப்பிடத்தக்கது.