லோகி-க்கு முன்னாடி நான் முந்திக்கிட்டே... 'GOAT' படத்தில் திரிஷா... வெங்கட்பிரபு சொன்ன சுவாரஸ்யம்...!

by ramya suresh |   ( Updated:2024-09-13 15:03:44  )
லோகி-க்கு முன்னாடி நான் முந்திக்கிட்டே... GOAT படத்தில் திரிஷா... வெங்கட்பிரபு சொன்ன சுவாரஸ்யம்...!
X

#image_title

கோட் திரைப்படத்தில் நடிகை திரிஷா கமிட்டான சுவாரஸ்யம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்து இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாக பின்னர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை திரிஷா. கோலிவுட் திரையுலகின் குயின் என்ற அந்தஸ்தில் இருக்கும் த்ரிஷா தமிழ் திரையுலகில் கமலஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, ஆர்யா, சிம்பு, தனுஷ் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து இருக்கின்றார். கடந்த சில வருடங்களாக ஃபீல்ட் அவுட்டாகி இருந்த திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல கம்பேக்காக அமைந்திருந்தது. நடிகர் விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்து மீண்டும் பிரபலமானார்.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி படத்தில் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள். அதன் பிறகு திருப்பாச்சி, குருவி, ஆதி உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்து மிகச் சிறந்த ஆன் ஸ்கிரீன் ஜோடியாக வலம் வந்தார்கள். இதனையடுத்து பல வருடங்கள் கழித்து மீண்டும் லியோ திரைப்படத்தில் நடித்தது. விஜய் திரிஷா ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது.

இதையடுத்து மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரத் தொடங்கி இருக்கின்றார் திரிஷா. தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாகவும், தக்லைப் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் தற்போது கோட் என்கின்ற திரைப்படத்தில் மட்ட என்கின்ற பாடலுக்கு விஜயுடன் இணைந்து திரிஷா நடனமாடி இருந்தார். குறிப்பாக கில்லி பட பாடலை ரீமிக்ஸ் செய்தது போல இருந்தது.

இது அனைவரது மத்தியிலும் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது. மஞ்சள் நிற புடவையில் திரிஷா போட்ட குத்தாட்டம் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்றது. இந்த பாடல் உருவான விதம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கூறிய போது 'கடைசி நிமிடத்தில் தான் த்ரிஷா இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட கம்மிட்டானார்.

மேலும் லியோ படத்தின் சக்ஸஸ் மீட்டில் 'அப்படி போடு' என்ற பாடல் மீண்டும் வேண்டும் என்று கூறியிருந்தார்கள். அந்த பாடல் போன்று ஒரு பாடல் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டு மட்ட பாடல் எடுத்ததாக தெரிவித்திருந்தார். லோகேஷுக்கு முன்னதாக நான் முந்தி கொண்டேன்' என்று அந்த பேட்டியில் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.

Next Story