பிரேம்ஜி பார்க்க வரதே இல்லை… கல்யாணத்துக்கு பின் எல்லாம் மாறிச்சு… அண்ணனா ஃபீலிங்கா?
Premji: கோலிவுட்டின் மாஸ் வாண்டட் பேச்சுலர் என கலாய்க்கப்பட்டு வந்த பிரேம்ஜிக்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது. அது குறித்து அவருடைய அண்ணனும் இயக்குனருமான வெங்கட் பிரபு தன்னுடைய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறார்.
இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரனின் இரண்டாவது மகன்தான் பிரேம்ஜி. 97 ஆம் ஆண்டு பிரேம்ஜி கோலிவுட் இயக்குனராக தான் அடி எடுத்து வைத்தார். ஆனால் அந்த படத்தின் ஷூட்டிங் கூட முடியவில்லை. இதை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பின்னணி பாடகராக இருந்தார்.
இதையும் படிங்க: முதல் ஆளா சிம்புவா? நம்பிக்கை அதானே எல்லாம்.. கமலால் நடந்த அதிசயம்..
கோலிவுட்டில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான நிறைய ராப் பாடல்களை பிரேம்ஜி தான் பாடியிருக்கிறார் என்பது கூடுதல் சுவாரசியமான தகவல். வல்லவன் படத்தில் முதல் முறையாக பிரேம்ஜி நடிக்க தொடங்கினார். அது அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.
இதைத் தொடர்ந்து அண்ணன் வெங்கட் பிரபு இயக்குனராக கோலிவுட்டில் கால் பதிக்க அவருடன் நடிகராக பிரேம்ஜி வலம் வந்தார். இதுவரை வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் எல்லா திரைப்படத்திலும் பிரேம்ஜிக்கு முக்கிய கதாபாத்திரத்தையும் கொடுத்துவிடுவார்.
அந்த வகையில் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் பிரேம்ஜி ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. 45வயதாகும் பிரேம்ஜி பேச்சிலராகவே வலம் வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அவருக்கும் இந்து என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
இதையும் படிங்க: எலே இது வேட்டையன் இல்ல அடுத்த தர்பாராம்.. லீக்கான வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்
சனிக்கிழமை எங்கிருந்தாலும் என்னை தேடி என்னை பார்க்க வந்து விடுவான். ஆனால் இப்போதெல்லாம் ஆள் அடையாளமே தெரிவதில்லை என தன்னுடைய தம்பியை கலாய்த்து கூறி இருக்கிறார். சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூட தவெக கழகத்தில் உங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியல்வாதி வருவாரா என கேட்டதற்கு பிரேம்ஜி அங்கிருந்தவர்களை அசராமல் கலாய்த்த வீடியோ கூட இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.