சத்தியம் எல்லாம் செஞ்சியே கோபாலு… ரிலீசுக்கு பின்னர் மாற்றிய பேசிய வெங்கட் பிரபு

by Akhilan |   ( Updated:2024-09-14 09:06:54  )
சத்தியம் எல்லாம் செஞ்சியே கோபாலு… ரிலீசுக்கு பின்னர் மாற்றிய பேசிய வெங்கட் பிரபு
X

Venkat Prabhu

Venkat Prabhu: இயக்குனர் வெங்கட் பிரபு படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் தற்போது கொடுத்துவரும் பேட்டிகள் மீண்டும் வைரலாகி வருகிறது. அதன் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் அவரை கலாய்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாகவே இயக்குனர்கள் தங்கள் படம் சொதப்பிவிட்டால் அதற்கு இன்னொருவர் மீது பழியை போடுவது வழக்கமாகி வருகிறது. பீஸ்டில் தொடங்கி சமீபத்தில் வெளியான லால் சலாம் வரை ஏதோ ஒரு காரணத்தை இயக்குனர் கூறி வருவது தொடர்கதை ஆகியிருக்கிறது.

இதையும் படிங்க: ஆத்தாடி…பிபி7 முடிஞ்சும் இந்த டீம் ஏ, டீம் பி அடிச்சிக்கிறத நிறுத்தலையா… இன்னொரு பஞ்சாயத்தா?

பீஸ்ட் திரைப்படத்தில் திரைக்கதை சொதப்பியதற்கு தயாரிப்பு நிறுவனம் கொடுத்த குறைந்தபட்ச நேரம் தான் என நெல்சன் தரப்பு தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து விஜயின் லியோ திரைப்படத்தில் பிளாஷ்பேக் காட்சிகள் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்காமல் போனது. ரசிகர்கள் சில கேள்விகளையும் படக்குழுவிடம் முன் வைத்தனர்.

அதைத்தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் கொடுத்த பேட்டியில் அந்த ஃப்ளாஷ்பேக் பொய் தான் என பேசி இருப்பார். தொடர்ந்து ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் திரைப்படத்தின் ரிலீஸ் இருக்கும் முன்னர் படம் தேசிய விருது கூட வாங்கும் என படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியிருப்பார்.

Goat

ஆனால் படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான தோல்வியை அடைந்தது. போட்ட பட்ஜெட்டை கூட எடுக்க முடியாமல் தொய்வை சந்தித்த திரைப்படம் இன்னுமே ஓடிடி தளங்களில் வெளியாகாமல் இருக்கிறது. இதற்கிடையில் பேட்டி கொடுத்திருந்த இயக்குனர் ஐஸ்வர்யா தன்னுடைய முக்கிய ஹார்ட் டிஸ்க் தொலைந்து விட்டதாக தெரிவித்திருந்தார். அது இருந்திருந்தால் படம் இன்னும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கும் எனவும் பேசி இருப்பார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் சீன் சொதப்பல்! அதற்கான காரணத்தை கூறிய கோட் ஒளிப்பதிவாளர்

இதனால் கோட் படத்தின் ரிலீஸ் இருக்கும் முன்னரே வெங்கட் பிரபுவிடம் பிளாஷ்பேக் பொய், ஹார்ட் டிஸ் காணல உள்ளிட்ட விஷயங்களை மாற்றி பேச மாட்டீங்களே என கேள்வி கூட முன்வைக்கப்பட்டது. ஆனால் அப்போதெல்லாம் வெங்கட் பிரபு எல்லாம் சுபமா முடிஞ்சுச்சு. சத்தியமா மாற்றிப் பேசமாட்டேன். படம் எடிட்டிங் எல்லாம் முடிந்து விநியோகஸ்தருக்கு அனுப்பப்பட்டு விட்டது எனவும் தெரிவித்திருப்பார்.

ஆனால் தற்போது படம் ரிலீஸ் ஆகி சில நெகட்டிவ் விமர்சனங்களையும் குவித்து வருகிறது. முக்கியமாக படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகள் பெரிய அளவில் அடிவாங்கி இருக்கிறது. இந்நிலையில் தற்போது பேட்டி கொடுத்திருக்கும் வெங்கட் பிரபு, எனக்கு நேரம் பற்றவில்லை. அதனால் தான் படத்தில் சில தவறுகள் நடந்திருக்கிறது.

இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் நேரம் கிடைத்திருந்தால் படத்தில் இன்னும் 30 அல்லது 40 சதவீதம் மெருகேற்றி இருப்போம் எனத் தெரிவித்திருக்கிறார். ரசிகர்கள் தற்போது பழைய பேட்டி மற்றும் இந்த பேட்டியின் வீடியோக்களை இணைத்து சத்தியம் எல்லாம் பண்ணிங்களே என கலாய்த்து வருகின்றனர்.

அந்த ட்வீட்டைக் காண: https://x.com/KABiLANS7/status/1834446491361943581

Next Story