Connect with us

Cinema History

எங்க குருவே நீங்க தான் சார்.! வெங்கட் பிரபுவை புகழ்ந்த இளம் முன்னணி இயக்குனர்கள்.!

இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் தமிழ்த் திரையுலகின் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எனும் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகினார். இவர் நடிகர், இயக்குனர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர்.

இவர் சென்னை 600028 எனும் தமிழ் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து அவர் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி, மாநாடு உள்ளிட்ட பல்வேறு வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இவரது இயக்கத்தில் வெளியாகிய சரோஜா படத்தில் ஒரு சீரியஸான கதைக்களத்தை ஹியூமர் காமெடி கொண்டு எழுதியதை பார்த்து தான் தாங்களும் கோலமாவு கோகிலா, நானும் ரவுடிதான் போன்ற சீரியசான கதைகளை ஹியூமர் காமெடி கொண்டு உருவாக்கியதாக இயக்குனர் நெல்சன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் கூறியுள்ளனர்.

அதனை கூறிவிட்டு எங்களுக்கு குருவே நீங்க தான் சார் என இருவரும் வெங்கட் பிரபுவை பார்த்து சீரியஸ் கதைக்களத்தில் காமெடியை புகுத்தி எங்களுக்கு குருவாக இருந்ததே நீங்கள் தான் என புகழ்ந்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top