வெங்கட்பிரபுவுக்கு ஓகே சொன்ன அந்த ஹீரோ!.. விஜய வச்சி படமெடுத்தும் வச்சி செஞ்சிட்டாரே!..

Venkat prabhu
சென்னை 28 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக வெங்கட்பிரபு. இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் இவர். இயக்குனராவதற்கு முன் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். தன்னுடைய நட்பு வட்டாரத்தை வைத்து சென்னை 28 படத்தை இயக்கினார். கிரிக்கெட் மற்றும் காதலை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாகியிருந்தார்.
இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.
எனவே, சரோஜா, கோவா என தொடர்ந்து திரைப்படங்களை இயக்கினார். அஜித்தை வைத்து வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா படம் சூப்பர் ஹிட் அடித்தது. நெகட்டிவ் வேடத்தையே மாஸாக காட்டி அஜித்தை ரசிக்க வைத்தார். அதன்பின்னர்தான் அஜித்தின் ரூட்டே மாறியது. நிறைய நெகட்டிவ் வேடத்தில் நடிக்க துவங்கினார்.
வெங்கட்பிரபு தொடர் வெற்றியை கொடுக்கும் இயக்குனர் இல்லை. கார்த்தியை வைத்து இயக்கிய பிரியாணி, சூர்யாவை வைத்து இயக்கிய மாஸ் என்கிற மாசிலாமண்இ போன்ற படங்கள் ஓடவில்லை. மிண்டும் அஜித்தை வைத்து படமெடுக்க முயற்சி செய்தார். ஆனால், பல வருடங்களாகியும் அது நடக்கவில்லை.
விஜயை வைத்து படமெடுக்க பல வருடங்கள் முயற்சி செய்து ஒரு வழியாக கோட் படத்தில் அது நடந்தது. ஆனால், இந்த படமும் மெகா ஹிட் அடிக்கவில்லை. இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனை ஒரு காட்சியில் நடிக்க வைத்தார் வெங்கட்பிரபு. அதோடு, சிவகார்த்திகேயனின் 25 வது படத்தை வெங்கட்பிரபுவே இயக்குவதாக இருந்தது. அதற்காக விஜயிடமிருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயனுக்கு வாங்கி கொடுத்தார்.

ஆனால், கோட் பட ரிசல்ட்டை பார்த்துவிட்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிப்பதிலிருந்து பின்வாங்கினார். எனவே, விஜயை வைச்சி படமெடுத்தும் அடுத்த ஹீரோ கிடைக்காமல் தவித்து வந்தார் வெங்கட்பிரபு. எப்படியாவது சிவகார்த்திகேயனை சம்மதிக்க வைக்க பலவகைகளிலும் முயற்சி செய்தார். ஒருவழியாக சிவகார்த்திகேயன் சம்மதித்துவிட்டார். படத்தின் முழு கதையையும் படித்து பார்த்த பின்னரே இந்த படத்தில் நடிக்க அவர் சம்மதித்திருப்பதாக சொல்லப்படுகிறது. வருகிற ஆக்ஸ்டு மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
சிவகார்த்திகேயன் இப்போது பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இது முடிந்ததும் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வந்த மதராஸி படத்தில் சில நாட்கள் நடிக்க வேண்டியிருக்கிறது. அது முடிந்தபின் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.