ப்ளீஸ் சார் வேண்டாம்.! வெங்கட் பிரபுவை கெஞ்சும் ரசிகர்கள்.! காரணம் இதுதானா?
மாநாடு படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்துக்கு மன்மத லீலை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு மட்டுமில்லைங்க படமுழுக்க 18+ வார்த்தைகள் அதிகம் இருப்பதாக பேசப்படுகிறது.
அசோக் செல்வனை வைத்து வெங்கட் பிரபு இயக்கி ரிலீசுக்கு ரெடியாக உள்ள இப்படத்திற்கு மூன்று நடிகைகள் யாரெல்லாம் தெரியுமா.? சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் இவர்கள் மூவரும் நடிக்கின்றன. இப்படத்திற்கு வெங்கட் பிரபுவின் ஆஸ்தான கேமரா மென் சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், மன்மத லீலை திரைப்படம் முழுக்க முழுக்க அடல்ட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளதாம். மாநாடு திரைப்படத்தில் தன்னை ஒரு திறமையான இயக்குனர் என காட்டிய வெங்கட் பிரபு தனது அடுத்த படமான மன்மத லீலை படத்தில் அடல்ட் காமெடியை நம்பி இறங்கிவிட்டார்,
இதனை அறிந்த பலர் மாநாடு படம் வெற்றியை தொடர்ந்து இப்படி ஒரு கதையை தேர்வு செய்தது ஏன்.?என கேள்வி எழுப்ப தொடங்கினர். இந்நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை தருமா இல்லை ஏமாற்றத்தை தருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.