அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் என சொல்லி வந்தது போய் இப்போது அவர் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் ‘அடுத்த தளபதி யார்?’ என்கிற கேள்வியும் திரையுலகிலும், ரசிகர் மத்தியிலும் எழுந்திருக்கிறது. அதேநேரம், இது தேவையில்லாத விவாதம்.. ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்தான் என சொல்வது போல தளபதி என்றால் அது விஜய் மட்டுமே என ஒருபக்கம் சொல்லி வருகிறார்கள்.
ஆனால், சினிமாக்காரர்கள் சும்மா இருப்பார்களா?.. புதுமுக நடிகர்களை கூட ‘அடுத்த விஜய் இவர்தான்’ என இப்போதே சொல்ல துவங்கி விட்டனர். பொதுவாக சினிமா தொடர்பான நிகழ்ச்சி என்றாலே அதிகமான முகஸ்துதியை பலரும் செய்வார்கள். ஒரு ஹீரோ அப்போதுதான் அறிமுகமாகி இருப்பார்.
இதையும் படிங்க: வீட்டு வேலைக்காரர்களை கேவலமாக நடத்துகிறாரா ரஜினி? பிரபலம் கொடுத்த ‘நச்’ பதில்!..
முதல் படம் அப்போதுதான் ரிலீஸ் ஆகியிருக்கும். ஆனால், அவர் ஏதோ 100 படங்களில் நடித்தவரை போல பில்டப் செய்வார்கள். அவரை சூப்பர்ஸ்டார் ரேஞ்சிக்கு சித்தரித்து தியேட்டரில் பேனர் வைப்பார்கள். போஸ்டர் அடிப்பார்கள். ரசிகர் மன்ற பேனர் எல்லாம் கட்டி இருப்பார்கள். அதில், தலைவர், செயலாளர், பொருளாளர் என சிலரின் புகைப்படங்களும் இருக்கும்.
வடிவேலு சொல்லும் ‘ரத்த பூமி’ என்கிற தலைப்பில் ஒரு புதிய படம் உருவாகியுள்ளது. இந்த படக்குழு சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அந்த பட ஹீரோவை காட்டி ‘இவர்தான் அடுத்த தளபதி. ஆக்ஷன்லாம் பக்காவா பண்றாரு’ என ஒருவர் அள்ளிவிட்டார். அவர் அப்படத்தின் இயக்குனரா என்பதும் கூட தெரியவில்லை.
இதையும் படிங்க: அருண் விஜய் படத்துக்கு கிடைத்த விமோச்சனம்!.. ரஜினிகாந்த் படத்துக்கு எப்போது கிடைக்கும்?..
அந்த ஹீரோவோ அந்த படத்தில் பேசிய ஒரு பன்ச் வசனத்தை பேசி செய்தியாளர்களை அதிர வைத்தார். மேலும், ஒத்த விரலில் ஓடும் ரயிலை நிப்பாட்டுவது போல ஒரு காட்சியில் நடித்திருக்கிறேன்’ என சொல்லி கண்கலங்க வைத்தார். இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் வெங்கட்பிரபு ‘நமக்கு டஃப் காம்பிட்டேஷன் கொடுப்பாங்க போலயே’ என பதிவிட்டு தமிழ் சினிமாவின் கிரின்ச் காட்சிகளை கலாய்த்து படமெடுத்த இயக்குனர் சி.எஸ்.அமுதனை டேக் செய்திருந்தார்.
அதற்கு பதில் சொன்ன அமுதன் ‘நாம் இருக்க இடத்தை நினைச்சி சந்தோஷப்படக்கூடாது சார். உழைச்சிக்கிட்டே இருந்தாதான் இவங்களோட காலத்துல இருக்க முடியும்’ என நக்கலடித்துள்ளார். இந்த வீடியோ பலரையும் சிரிக்க வைத்திருக்கிறது.
