நீங்க கேட்ட 'விசில் போடு' பாட்டு படத்துல வராது!.. இன்னும் என்னென்ன வச்சிருக்காரோ VP..

by சிவா |
goat
X

#image_title

Goat: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் கோட். இந்த திரைப்படம் வருகிற 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் மகன் வேடத்தில் வரும் விஜயை ஏஜிங் டெக்னாலஜி மூலம் மிகவும் இளமையாக காட்டியிருக்கிறார் வெங்கட்பிரபு.

இதற்கு முன் இந்த தொழில்நுட்பத்தை ஹாலிவுட்டில் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். வில் ஸ்மித் நடிப்பில் வெளிவந்த ஜெமினி மேன் படத்தில் கூட இந்த தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி இருந்தார்கள். தமிழில் முதன் முதலாக வெங்கட்பிரபுவே இந்த முயற்சியை செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: கோட் படத்துக்கு அனுமதி வரும்னு பார்த்தா கட்சிக்கு வந்துவிட்டதே ஆப்பு!

மாநாடு படத்தில் டைம் டிராவலை அடிப்படையாக வைத்து ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதேபோல் கோட் படத்திலும் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் ரசிகர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் வீடியோவும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆனால், வெளியான முதல் பாடலே ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதுதான் விசில் போடு பாடல். விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் ஒன்றாக நடனமாடுவது போல் அந்த பாடல் வீடியோ வெளியானது. ஆனால், அனிருத் ரேஞ்சுக்கு இல்லை என விஜய் ரசிகர்களே நினைத்தார்கள்.

goat

#image_title

கோபப்பட்ட விஜய் வெறியர்கள் யுவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போய் திட்ட அந்த கணக்கையே மூடிவிட்டு போனார் யுவன் சங்கர் ராஜா. அதேபோல், அதன்பின் வெளியான 2 பாடல்களும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இதுபற்றி ஊடகம் ஒன்றில் கருத்து சொன்ன வெங்கட்பிரபு, ‘படம் வெளியான பின் எல்லா பாடல்களும் ரசிகர்களுக்கு பிடிக்கும்’ என சொல்லி இருந்தார்.

இந்நிலையில், ஊடகமொன்றில் பேசிய வெங்கட்பிரபு ‘விசில் போடு’ பாட்டுதான் கோட் படத்தின் ஓப்பனிங் பாடல். ஆனால், நீங்கள் கேட்ட வெர்ஷன் படத்தில் இருக்காது. மற்றொரு வெர்ஷனைத்தான் நீங்க பார்க்க போறீங்க. ரசிகர்களுக்கு தியேட்டரில் திருவிழாக்கோலமாக இருக்கும்’ என சர்ப்பரைஸ் கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: விக்ரம் படம் மாதிரி ‘கூலி’ படமும் எல்சியூவா? அட ஆமா? ரீவைண்ட் பண்ணி பாருங்க

Next Story