நழுவி ஓடும் எஸ்.கே!.. பல பேரையும் வச்சி ரூட்டு போடும் வெங்கட்பிரபு!. ஐயோ பாவம்!...

#image_title
Sivakarthikeyan: சென்னை 28 திரைப்படம் மூலம் இயக்குனராக மாறியவர் வெங்கட்பிரபு. அதன்பின் கோவா, சரோஜா, பிரியாணி, மங்காத்ததா உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். இதில், மங்காத்தா மட்டுமே சூப்பர் ஹிட் அடித்தது. அந்த படத்திற்கு பின் வெங்கட்பிரபு இயக்கிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
எனவே, பெரிய நடிகர்கள் வெங்கட்பிரபு பக்கம் போகவில்லை. ஆனாலும், பல வருட முயற்சியின் காரணமாக விஜயிடம் ஒரு கதையை சொல்லி சம்மதம் வாங்கினார் வெங்கட்பிரபு. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க அப்படி உருவான திரைப்படம்தான் கோட். விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான இப்படம் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு லாபமே என்றாலும் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெறவில்லை.
கோட் படத்தை எடுத்து கொண்டிருந்தபோதே வெங்கட்பிரபுவை சில பெரிய நடிகர்கள் அணுகினார்கள். ஆனால், இந்த படம் முடியட்டும்.. பேசுவோம். என சொன்னார் வெங்கட்பிரபு. ஒருபக்கம் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க எஸ்.கே (சிவகார்த்திகேயனும்) முன் வந்தார். அதுதான் அவரின் 25வது படமாக வெளிவருவதாக இருந்தது.

Venkat Prabhu
ஆனால், கோட் படம் வெளியான பின் சிவகார்த்திகேயன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சுதா கொங்கரா இயக்கத்தில் மதராஸி படத்தில் நடிக்கப்போய்விட்டார். வாட் புரோ.. இட்ஸ் ராங் புரோ.. என வெங்கட்பிரபு ஃபீல் பண்ணியும் எஸ்.கே கண்டுகொள்ளவில்லை. அதோடு அடுத்து டான் பட இயக்குனர் படம் என தொடர்ந்து இயக்குனர்களை புக் செய்துவிட்டார் எஸ்.கே.
அதோடு, உங்களுக்கு 2026 கடைசியில்தான் கால்ஷீட் என வெங்கட்பிரபுவிடம் எஸ்.கே.சொல்லிவிட்டார். சரி வேற ஹீரோவை வைத்து எடுக்கலாம் என்றால் எந்த ஹீரோவும் வெங்கட்பிரபு பக்கம் போகவில்லை. எனவே, சிவகார்த்திகேயனை எப்படியாவது சம்மதிக்க வைத்து படத்தை இயக்க வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறாராம்.
யார் யாரையோ விட்டு தூது விட்டு பார்த்தும் சிவகார்த்திகேயன் சம்மதிக்கவில்லை. இப்போது சிவகார்த்திகேயனுக்கு நெருக்கமாக இருக்கும் மாவீரன் பட தயாரிப்பாளரிடம் உதவி கேட்டு போயிருக்கிறாராம். கண்டிப்பாக தம்பிக்கிட்ட சொல்லி சீக்கிரம் உங்களுக்கு கால்ஷீட் வாங்கி தரேன் என வாக்குறுதி அளித்திருக்கிறாராம் மாவீரன் பட தயாரிப்பாளர். இதற்காக அவரின் அலுவகத்திலேயே தவம் கிடக்கிறாராம் வெங்கட்பிரபு.
விஜயை வச்சி படம் எடுத்தவருக்கு இப்படி ஒரு நிலமையா?!...