
Cinema News
தகப்பா என்ன இதெல்லாம்.? இணையத்தில் வெங்கட் பிரபு செய்த வேலைய பாருங்க…
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது மாநாடு எனும் பிளக் பஸ்டர் திரைப்படத்தையும், மன்மத லீலை எனும் எதிர்பாரா சூப்பர் ஹிட் படத்தையம் கொடுத்து புது தெம்புடன் அக்கட தேசத்தில் தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்க தயாராகிவிட்டார்.
அந்த திரைப்படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்க உள்ளார். விரைவில் அதற்கான ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளது. அந்த படத்தை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார் என கூறப்படுகிறது.
இப்படி போய்க்கொண்டிருக்கும் போது, அண்மையில் வெங்கட் பிரபுவின் அப்பா இசையமைப்பாளர் கங்கை அமரன், ‘வெங்கட் பிரபுவிடம் விஜயையும், அஜித்தையும் வைத்து சேர்த்து படம் இயக்க கதை தயாராக இருக்கிறது ‘ என்பது போல் பேட்டியளித்துவிட்டார்.
இதையும் படியுங்களேன் – வெற்றிமாறனால் வெறுப்பாகிய சூப்பர் இயக்குனர்.! இறுதியில் 20 வருட நட்பு தான் அவரை காப்பாற்றியது.!
அது நேற்று முழுக்க இணையத்தில் தலைப்பு செய்தியாக மாறிவிட்டது. பலரும் அடுத்த பான் இந்தியா திரைப்படம் ரெடி என்றவாறு ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். இதனை கவனித்த வெங்கட் பிரபு நேற்று சாயங்காலம் தனது டிவிட்டரில் ஒரு மனிதன் அதிர்ச்சியில் பார்ப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
இந்த டிவீட்டை பார்த்த ரசிகர்கள், அதற்கு கிழே, தகப்பா என்ன இதெல்லாம் என்பது போல இருக்கிறது. அப்பாவின் பேட்டிக்கும், நெட்டில் உலாவிய வதந்திகளுக்கும் தான் இது முற்றுப்புள்ளி என கூறி வருகின்றனர்.
— venkat prabhu (@vp_offl) June 20, 2022