More
Categories: Cinema News latest news

கோட் படத்துல ஒரு சிக்கல்… ஆனா அதுதான் பிளஸ்..! இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ்

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசையில் விரைவில் வெளிவர உள்ள படம் கோட். இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா உள்பட பலர் நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் காட்டுகிறார்கள்.

Also read: நெப்போட்டிசத்தின் மறு உருவம்தான் ‘கோட்’! ரசிகரின் கமெண்டுக்கு vp கொடுத்த பதிலடி

Advertising
Advertising

டீஏஜிங் தொழில்நுட்பத்தில் இளமையான விஜயைக் காட்டுகிறார்கள். இந்தப் படத்தின் எதிர்பார்ப்புக்கு இவை தான் காரணம். படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் என்றதும் இவ்வளவு நேரம் படத்தை இப்போதுள்ள ரசிகர்கள் பார்ப்பார்களா என்று சர்ச்சை எழுந்தது. விஜய் படம் ஸ்பீடாக இருக்கும்.

அதனால் நேரம் போறதே தெரியாது என்றெல்லாம் சொன்னார்கள். இதை சென்சார் போர்டு அதிகாரிகளே படத்தைப் பார்த்து விட்டு சொன்னார்கள். இந்த நிலையில் கோட் படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு படத்தோட நீளம் ஏன் 3 மணி நேரம் என்பதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

vp

கதை தான் படத்தின் நீளத்தை முடிவு பண்ணும். இந்தக் கதைக்கு 3 மணி நேரம் தேவை. நாம யோசிச்சிட்டோம். இதைத் தாண்டியும் நிறைய சீன்ஸ் படத்துல இருக்கு. அதை பிளான் பண்ணினோம். டெலிடட் சீன்ஸ் எல்லாம் விடலாம்னு. நல்ல ஜாலியான சீன்ஸ் எல்லாம் இருக்கு. டைரக்டர்ஸ் ஸ்கிரிப்ட்னு கூட விடலாம். இன்னும் 3.20 மணி நேரம் சீன்ஸ் இருக்குன்னு நினைக்கிறேன்.

பிராப்பரா எடிட் பண்ணி விடலாம். அதைக் கூட என்ஜாய் பண்ணுவாங்க. கதைக்கு என்ன தேவையோ அதை பண்ணிருக்கோம். நிறைய படங்கள்ல நீளம் அதிகமா இருக்குன்னு ரிலீஸ்சுக்கு அப்புறம் கட் பண்ணுவாங்க. இதுல கட் பண்ணினா கதை போயிடும். எல்லா சீன்களுமே லிங்க்காகி இருக்கிறது. ஒரு சீனைத் தூக்கி விட்டாலும் கதையோட லிங் இல்லாம போயிடும்.

Also read: விஜய் கெரியரில் மிக நீளமான இரண்டாவது படம் ‘கோட்’! முதல் படம் எதுனு தெரியுமா?

அதான் இந்தப் படத்துல வர்ற பிரச்சனை. ஒரு சீனைத் தூக்கிட்டா கதைக்கு சம்பந்தமே இல்லாம ஒண்ணு வருதுன்னு எதுவுமே படத்துல கிடையாது. தனியா எடுக்கப்பட்ட காமெடி அது இதுன்னு எதுவுமே இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v