Cinema News
கோட் கிளைமேக்ஸில் தோனியும், விஜயும் ஒரு செம சீன்!.. ஆனா நடக்காம போச்சே!…
Goat: வெங்கட்பிரபு ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். சிறுவனாக இருக்கும்போதிலிருந்தே நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவார். தனது டிவிட்டர் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் டீம் மற்றும் சி.எஸ்.கேவின் டை ஹார்ட் ஃபேன் என கேப்ஷன் கொடுத்திருப்பார். சென்னையில் சி.எஸ்.கே. டீம் விளையாடினால் நேரில் போய் பார்ப்பார்.
படப்பிடிப்பு தளங்களில் நேரம் கிடைத்தால் படப்பிடிப்பு குழுவினருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவார். இவரின் முதல் படமான சென்னை – 28 படத்தின் கதையை கிரிக்கெட்டை மையமாக வைத்தே உருவாக்கியிருந்தார். அதன்பின் சென்னை – 28 2ம் பாகமும் கிரிக்கெட்டை மையப்படுத்தியே எடுத்தார்.
இதையும் படிங்க: கோட் படத்தில் எஸ்.கே, ஜீவன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவங்கதானா? நல்லா இருக்கே!
ஹைதராபாத்தில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச்சை பார்க்க போகும் நபர்கள் போகும் வழியில் என்ன பிரச்சனையை சந்திக்கிறார்கள் என்பதைத்தான் சரோஜா படத்தின் கதையாக எழுதியிருந்தார். இப்போது அவரின் இயக்கத்தில் கோட் படம் வெளியாகியிருக்கிறது. விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.
ஹாலிவுட்டில் வந்த ஜெமினி மேன் படக்கதையில் இன்ஸ்பிரேசன் ஆகியே இப்படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட்பிரபு . எனவே, விஜயை ஏஜிங் டெக்னாலஜி மூலம் இளமையாக்கி அவரையே வில்லனாக மாற்றிவிட்டார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஆனாலும், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை பெற்று வருகிறது. கோட் படத்தின் இறுதிக்காட்சி ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடப்பது போலவும் தோனியும் அதில் நடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால், படத்தில் அப்படி எதுவும் காட்சி இல்லை. சிவகார்த்திகேயன் மட்டுமே சி.எஸ்.கே யூனிபார்மில் வந்துவிட்டு போனார்.
இந்நிலையில், எக்ஸ் தளத்தில் ஸ்பேஷ் உரையாடலில் கலந்து கொண்டு பேசிய வெங்கட்பிரபு ‘படத்தின் கிளைமேக்ஸில் தோனியையும் விஜய் சாரையும் ஒரு ஃபிரேமிலாவது ஒன்றாக காட்டிவிட வேண்டும் என ஆசைப்பட்டேன். தோனியிடம் விஜய் சார் ‘All the best for the finals’ என வாழ்த்து சொல்லிவிட்டு போவது போல ஒரு காட்சியை எடுக்க வேண்டும் என யோசித்து வைத்திருந்தேன். ஆனால், தோனியை எங்களால் அழைத்து வர முடியவில்லை’ என சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: ஆமாம்.. மனைவி ஆர்த்தியை பிரிகிறேன்!.. ஒருவழியாக வாய் திறந்த ஜெயம் ரவி…