விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். அவரது 60 சதவீத படங்கள் வெற்றி என்றாலும் 40 தவீத படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது. சீமத்துரை, ஹீரோ, பிரின்ஸ், வேலைக்காரன் போன்ற படங்கள் தோல்வியடைந்தது. அதே நேரம் டாக்டர், டான், மாவீரன் போன்ற படங்கள் நல்ல வசூலை கொடுத்தது. அதேபோல் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை பெற்றது. ஆனால் அதன் பின்னர் வெளிவந்த மதராஸி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மண்ணை கவியது
அதேபோல், 1960களில் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து சுதாகொங்காரா இயக்கியுள்ள பராசக்தி படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அந்த படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்திற்கு ரிசல்ட் நன்றாக இல்லை.. ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.. படம் பெரிய வசூல் இல்லை என தியேட்டர் அதிபர்கள் சொல்கிறார்கள். அதோடு இந்த படம் ஓடும் பல தியேட்டர்கள் காத்து வாங்குவதாக சொல்லப்படுகிறது.
கிட்டத்தட்ட பராசக்தி படமும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இந்நிலையில்தான் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது ஒரு டைம் மெஷின் சயின்ஸ் பிக்சன் கதை என சொல்லப்படுகிறது. சிம்பு நடித்த மாநாடு படம் போல ஒரு வித்தியாசமான கான்செப்டில் இந்த படத்தின் கதையை வெங்கட்பிரபு உருவாக்கியிஇருக்கிறார். மாநாடு படத்தை விடவும் 10 மடங்கு அதிக திகில் மற்றும் திரில்லராக இந்த படம் இருக்கும் என படக் குழு சொல்கிறது.
எனவே மதராஸி, பராசக்தி தோல்விக்கு பின் இந்த படமாவது சிவவார்த்திகேயனுக்கு கைகொடுக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.



