நடிகர் சூர்யா ரெட்ரோ படத்திற்கு பின் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் 90 சதவீதம் முடிந்த நிலையில் படம் நிறுத்தப்பட்டது. அதோடு, துல்கர் சல்மானை வைத்து லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சூர்யா நடிக்கப்போனார். இது சூர்யாவின் 46வது திரைப்படமாகும்.
இந்த படத்தில் மமிதா பைஜூ முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், ரவினா டண்டன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்து வந்தனர். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் சூர்யா தனது 47வது படத்தில் நடிக்கப்போய்விட்டார்.

இந்த படத்தை மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கியது. பல வருடங்களுக்கு பின் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக சூர்யா நடித்து வருகிறார். எனவே, இந்த படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில்தான் ஊடகம் ஒன்றில் பேசிய சூர்யா 46 பட இயக்குனர் வெங்கி அட்லூரி இந்த படத்தின் கதை பற்றி பேசியிருக்கிறார். சூர்யா ஒரு பெண்ணை காதலிப்பார். ஆனால், அந்த பெண் இறந்துவிடவே பல வருடங்கள் கழித்து அவரின் உருவத்திலேயே பிறக்கும் அவரின் மகளை சூர்யா காதலிப்பார் என சொல்லியிருக்கிறார். மேலும், கஜினி படத்தில் வருவது போல இந்த படத்திலும் சூர்யா பெரிய கோடீஸ்வரராக நடித்திருக்கிறாராம்.
