தமிழ் சினிமா பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தி!.. ‘வெண்ணிலா கபடி குழு’ பட நடிகர் திடீர் மரணம்!..
தமிழ் சினிமாவையே இன்று ஒரு பெரும் துயரத்திற்கு ஆளாக்கிய செய்தி ஒன்று வைரலாகி வருகின்றது. மிகவும் வெற்றி நடைப் போட்ட வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஹரி வைரவன் இன்று காலமானார்.
அவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் திடீரென்று மரணமடைந்தார். இன்று அவரது சொந்த ஊரான மதுரையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. நடிகர் ஹரி வைரவன் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அந்த பரோட்டா காமெடி சீன் மூலம் மிகவும் கவர்ந்தவர்.
நான் மகான் அல்ல, குள்ளநரிக் கூட்டம், போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஹரி வைரவன். இருந்தாலும் வெண்ணிலா கபடி குழு படம் தான் இவருக்கும் சரி, நடிகர் சூரிக்கும் சரி ஒரு திருப்புமுனையாக இருந்த படம். 11 வருடங்களாக டையாபெட்டிஸ் பிரச்சினையால் மிகவும் பாதித்திருக்கிறார் ஹடி வைரவன்.
இதையும் படிங்க : அட கேளுங்க!.. நயனின் திரைப்படத்திற்கு இந்த சிறப்பு உண்டா?.. இதுலயும் அம்மணி தான் டாப்!..
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட ஹடி வைரவனே பேட்டி கொடுத்துள்ளார். என்னுடைய மருத்துவ செலவுக்காக இருந்த நகைகள், பணங்கள் எல்லாவற்றையும் விற்று விட்டேன் என்று கூறியிருக்கிறார். மேலும் இறக்கும் தருவாயில் பேசமுடியாத அளவுக்கு அவர் உடல் நிலை மிகவும் மோசமடைந்திருக்கின்றன.
இந்த அதிர்ச்சி செய்தியை கேட்டு திரையுலகினர் தங்களது வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். வெண்ணிலா கபடிக் குழு படத்தில் ஹரி வைரவன் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு நெருங்கிய நண்பர் கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.