Connect with us
mgr

Cinema History

ஜெயலலிதா செய்த வேலை!.. எம்.ஜி.ஆர் முன் உட்கார பயந்த வெண்ணிறாடை மூர்த்தி!..

தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் வெண்ணிறாடை மூர்த்தி. கருப்பு வெள்ளை காலம் முதல் கலர் படங்கள் வரை பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். குறிப்பாக இரட்டை அர்த்த வசனங்களுக்கு பெயர் போனவர் இவர். ஒரு கட்டத்தில் அதையும் ரசிகர்கள் அவரிடம் ரசிக்க துவங்கிவிட்டனர்.

மறைந்த முதல்வரும் நடிகையுமான ஜெயலலிதா அறிமுகமான வெண்ணிற ஆடை படத்தில்தான் இவரும் அறிமுகமானார். அதனால், அந்த படத்தின் பெயர் இவரிடம் ஒட்டிக்கொண்டது. அந்த படத்தில் நடித்தபோது ஜெயலலிதாவுடன் மூர்த்திக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. மூர்த்திக்கு ஜோசியம் பார்க்கும் திறமை உண்டு. எனவே, ஜெயலலிதாவின் கையை பார்த்து எதிர்காலத்தில் நீங்கள் பெரிய அரசியல்வாதியாக வருவீர்கள் என முதலில் அவரிடம் சொன்னதும் அவர்தான். அதன் காரணமாக முதல்வரான பின்னும் மூர்த்தியை அழைத்து அடிக்கடி பேசும் பழக்கமும் ஜெயலலிதாவுக்கு இருந்தது.

வெண்ணிற ஆடை படத்திற்கு பின் எம்.ஜி.ஆர் நடிக்கும் ஒரு படத்தில் நடிப்பதற்காக மூர்த்தி படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு ஜெயலலிதா இருந்தார். அப்போது ‘நீங்கள் எம்.ஜி.ஆரை பார்த்திருக்கிறீர்களா?’ என மூர்த்தியிடம் ஜெயலலிதா கேட்க ‘சினிமாவில்தான் பார்த்துள்ளேன்’ என அவர் சொல்ல சிரித்தபடியே அவரை எம்.ஜி.ஆரிடம் அழைத்து சென்றுள்ளார் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆர் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தார். அருகில் சென்றதும் அவரை எம்.ஜி.ஆர் உட்கார சொன்னாராம். ஆனால், எம்.ஜி.ஆர் முன் எப்படி அமர்வது என தயங்கிய மூர்த்தி நின்று கொண்டே இருந்தாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top