ஹீரோ சான்ஸ் கொடுத்த இயக்குனர்!.. ஆனா வெண்ணிற ஆடை மூர்த்தி கேட்டது இதைத்தான்!...

தமிழ் சினிமாவில் மிகவும் இனிமையாகவும் எளிமையாகவும் இருந்த நடிகர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி. அவரின் இனிமையான பேச்சும் பழகுவதில் மிக எளிமையும் கடைப்பிடிக்கும் வெண்ணிறாடை மூர்த்தி ஒரு பேட்டியில் அவரின் அனுபவங்களை பகிர்ந்தார்.

அவரை முதன் முதலில் திரையில் அறிமுகம் செய்தவர் புதுமைகளின் இயக்குனரான ஸ்ரீதர். அவர் இயக்கிய ‘வெண்ணிறாடை’ என்ற படத்தில் தான் மூர்த்தி முதன் முதலில் நடிகரானார். ஆனால் அவர் நடிக்க வந்ததே ஒரு வித்தியாசமான அனுபவம் தான் என்று சொல்லியிருக்கிறார். சினிமாவிற்குள் வருவதற்கு முன்னரே மூர்த்தி நடித்தால் நகைச்சுவையில் தான் நடிக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறாராம்.

moorthy1

moorthy1

ஸ்ரீதர் அலுவலகத்தில் மூர்த்திக்கு தெரிந்த நண்பர் இருந்தாராம். அவரின் உதவியோடு ஸ்ரீதரை பார்க்க சென்றிருக்கிறார் மூர்த்தி. அப்போது ஸ்ரீதரிடம் வாய்ப்பு வேண்டும் என்று சொன்னாராம் மூர்த்தி. ஸ்ரீதரும் எதாவது நடிச்சு காட்டு என சொல்லியிருக்கிறார். உடனே மூர்த்தி காமெடியாக சில காட்சிகளை நடித்தாராம்.

அதற்கு ஸ்ரீதர் ‘ஏன்ப்பா பார்க்க இரண்டாவது கதாநாயகன் மாதிரி இருக்க, காமெடி காட்சியில் நடிக்கிறீயே?’ என்று சொல்ல ‘ நான் காமெடி நடிகராகத்தான் வேண்டும்’ என்ற எண்ணத்தில் தான் சினிமாவிற்குள் வந்திருக்கிறேன். அதனால் காமெடியில் எதும் வாய்ப்பு இருந்தால் தாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

jaya2

moorthy

ஆனால் ஸ்ரீதர் உன்னை பார்த்தாலே சிரிக்க வரல, இதே நாகேஷை பார்க்கும் போதே சிரிப்பு தானாக வரும் என்று சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட மூர்த்தி சரி நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு கதவோரம் போனதும் ஸ்ரீதரை திரும்பி பார்த்து ‘ நான் ஆங்கிலத்தில் நிறைய படித்திருக்கிறேன், சிலருக்கு முகம் தான் அதிர்ஷ்டம் என்று, ஆனால் எனக்கு என் முகம் தான் துரதிர்ஷ்டம்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதை கேட்டதும் ஸ்ரீதர் வாயடைத்து போனாராம். அதன் பின்னரே அவரை வெண்ணிறாடை படத்தில் காமெடி நடிகராக அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதை சொன்ன வெண்ணிறாடை மூர்த்தி நான் சொன்ன அந்த ஒரு வசனம் தான் என்னை காமெடி நடிகராக மாற்றியது என்று கூறினார்.

 

Related Articles

Next Story