மனோரமாகிட்ட மட்டும் நெருங்க முடியல.. ஆட்டம் காட்டிய வெண்ணிறாடை மூர்த்தி..
தமிழ் சினிமாவில் தன் வாய் திறமையை வைத்து நகைச்சுவையில் முக்கியமான நடிகராக இருந்து வந்தவர் வெண்ணிறாடை மூர்த்தி. ஸ்ரீதரின் அறிமுகத்தில் அறிமுகமான வெண்ணிறாடை மூர்த்தி தொடர்ந்து 700 படங்களுக்கு மேல் நடித்து மிகத்திறமையான நடிகர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
இவரது தனிச் சிறப்பே இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளை பயன்படுத்தி அதன் மூலம் மக்களை ரசிக்க வைப்பது தான். அதனால் பாதிக்கப்பட்டவர்களில் நாகேஷும் முக்கியமானவர். மாட்டிக் கொண்டு முழித்திருக்கிறார்.
நடிப்பையும் தாண்டி இவரிடம் இருக்கும் மற்றொரு திறமை ஜோசியத்தில் வல்லவர் வெண்ணிறாடை மூர்த்தி. ஜோசியத்தில் சகலமும் தெரிந்தவராக இருக்கிறார். திரைத்துறையில் பல பேருக்கு ஜாதகம் சொல்லி அது பலித்தும் போயிருக்கிறது.
ஜாதகத்திற்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை என்பது மாதிரியான விஷயங்களில் மிகவும் ஆணித்தரமாக இருக்கிறார் மூர்த்தி. சிவாஜியில் இருந்து ஜெயலலிதா, ரஜினி ஆகியோருக்கு இவர் சொன்ன ஜாதகப்படி தான் நடந்திருக்கிறது. அதுவும் ஏன் அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் தான் வருவார் என்று சொல்லியிருக்கிறார். அதுவும் பலித்திருக்கிறது.
ஆனால் மனோரமாவுக்கு மட்டும் இவர் சொன்ன எந்த ஜோசியமும் பலிக்கவில்லையாம். நிறைய சொல்லியிருக்கிறாராம். ஆனால் எதுவுமே பலிக்கவில்லையாம். அதை பற்றி கூறும் போது ‘எனக்கும் மனோரமாவுக்கும் அப்போ ஒத்துப் போகவில்லை’ என்று அர்த்தம் என்று அவரோடு கருத்தின் மூலம் விளக்கமளித்தார்.
இதையும் படிங்க : ஓவர் ஆக்டிங் என கிண்டலடித்த சோ!.. ரூமுக்கு கூட்டிச்சென்று சிவாஜி என்ன செய்தார் தெரியுமா?..
ஒரு வேளை எனக்கும் அவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் ஜாதகப்படி ஒத்துப் போயிருந்தால் பலித்திருக்கும் என்று கூறினார். மேலும் இதையே தொழிலாகிவிடும் என்பதற்காக நிறைய பேர் வந்து பார்க்க வருவார்களாம். அப்போது அதை மறுக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஜோசியத்திற்கு 25000 ரூபாய் என சொல்லிவிடுவாராம். அதற்கு பயந்தே ஜோசியம் பார்க்க வரமாட்டார்களாம். அதிலிருந்து இவரும் அதை விட்டுவிட்டாராம்.