Cinema News
Delhi Ganesh: பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி
Dellhi Ganesh: பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு காலமானார். அவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள் உட்பட அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமீப காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்த டெல்லி கணேஷ் நேற்று இரவு 11 மணியளவில் ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தூங்கிய படியே அவருடைய உயிர் பிரிந்தது.
திரை அறிமுகம்: அவருடைய மறைவு செய்தியை கேட்டு திரை உலகினர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெல்லையில் பிறந்தார் டெல்லி கணேஷ். அவருடைய இயற்பெயர் கணேசன். அவர் முதன் முதலில் பட்டினப்பிரவேசம் என்ற படத்தில் கே பாலச்சந்தரால் 1976 இல் அறிமுகமானார். டெல்லியில் உள்ள தட்சிண பாரத நாடக சபாவில் நடிகராக இருந்ததால் டெல்லி கணேஷ் என அழைக்கப்பட்டார்.
400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ஒரு சிறந்த நடிகர் என்ற பெயரை வாங்கி இருக்கிறார். 1994 இல் தமிழக அரசின் கலை மாமணி விருதை பெற்றிருக்கிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் குறும்படங்கள் டிவி தொடர்கள் வெப் சீரிஸ்கள் என அனைத்திலும் இவருடைய பங்கு உள்ளடங்கியது. சமீபத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படத்திலும் இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.
விமானபடை அதிகாரி: ஆரம்பத்தில் ஒரு இந்திய விமானப்படையில் முக்கிய அதிகாரியாக பணியாற்றியவர் டெல்லி கணேஷ். இவர் பெரும்பாலும் கமல் நடித்த திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் .குறிப்பாக மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் இவருடைய காமெடி அனைவரையும் ரசிக்க வைத்தது.
அவ்வை சண்முகி படத்திலும் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக தோன்றி மக்களை சிரிக்க வைத்திருப்பார். மேலும் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லனாகவும் மிரட்டியிருப்பார். அதன் வரிசையில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் கமலின் திரைப்படம் தான்.
தூக்கத்திலேயே உயிர்பிரிந்தது: இந்த நிலையில் தான் சில தினங்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த டெல்லி கணேஷ் நேற்று இரவு 11 மணி அளவில் அவருடைய ராமாபுரத்தில் உள்ள வீட்டில் காலமானார். அவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.