கமலுக்கு கிடைத்த பாராட்டால் கடுப்பாகிய நடிகர்!.. கோபத்தில் ஏவிஎம் நிறுவனம் என்ன செய்தது தெரியுமா?..

Published on: February 23, 2023
kamal
---Advertisement---

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்று இன்று பல பேர் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவருடைய சிறுவயதிலேயே அவருக்கு பேனர்கள் எல்லாம் வைத்து ஒரு ஊரே பாடாட்டு விழா நடத்தி சிறப்பு செய்திருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல பேர் வியக்கும் அளவிற்கு தன்னுடைய நடிப்பாலும் ஆற்றலாலும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைப்பவர் நடிகர் கமல்ஹாசன்.

kamal1
kamal1

சினிமாவை பற்றி தெரியாத விஷயங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தொழில்துறையில் புது புது விஷயங்களை கற்று அதை தமிழ் சினிமாவில் புகுத்த விரும்புபவர் நடிகர் கமல். ஹாலிவுட்டில் ஏதாவது புது டெக்னாலஜி பயன்படுத்துகிறார்கள் என்றால் அதை தமிழ் சினிமாவிற்கு முதல் ஆளாக அறிமுகப்படுத்துவதே கமலாகத் தான் இருக்கும்.

சிவாஜிக்கு அடுத்து நடிப்புப் பல்கலைக் கழகமாக இளம் தலைமுறையினருக்கு இருந்து வருகிறார் கமல். அப்பேற்பட்ட கமலுக்கு குவிந்த பாராட்டுக்களால் மிகவும் கடுப்பேறி போனார் பிரபலமான நடிகர் ஒருவர்.  கமல் முதன் முதலாக ‘களத்தூர் கண்ணம்மா’ என்ற படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல் படத்திலேயே மிகவும் பிரபலமானார். குழந்தையாக இருக்கும் போதே மிகவும் அறிவுப்பூர்வமாகவும் பகுத்தறிவோடும் பேசுவாராம் கமல்.

kamal3
kamal3

அதனாலேயே அந்தக் காலத்தில் இருந்தே பிரபலங்கள் பலபேருக்கு அவரை மிகவும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. களத்தூர் கண்ணம்மாவில் கமலின் நடிப்பை பார்த்து மதுரை ரசிகர்கள் கமலுக்கு பாராட்டு விழா என்ற வகையில் மிகப்பெரிய பேனர்கள் வைத்து ஆச்சரியப்படுத்தினார்கள். இந்த பேனரை பார்த்து மூத்த நடிகரான குலதெய்வம் ராஜகோபால் கடுப்பாகிவிட்டாராம். மூத்த நடிகர்களையெல்லாம் அவமானப்படுத்துகிற மாதிரி இருக்கு, ஒரு குழந்தை நட்சத்திரத்திற்கு போய் இப்படி செய்கிறீர்களே அப்போ நாங்களெல்லாம் இந்தப் படத்தில் நடிக்கலையா? என்று ஏவிஎம் சரவணனிடம் சொல்லியிருக்கிறார்.

மேலும் இந்த விழாவில் கலந்து கொள்ளவும் மாட்டேன் என்று சரவணனிடம் கூற அதற்கு சரவணன் ‘பேனரில் கமல் பேரை பயன்படுத்தியிருந்தாலும் விழா மேடையில் உங்களை பற்றி தான் பெருமையாக பேசுவார்கள், கலந்து கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறார். ஆனாலும் குலதெய்வம் ராஜகோபால் முடியாது என்று நிற்க ‘இந்த விழாவில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்றால் இனி ஏவிஎம் தயாரிக்கும் எந்த படத்திலும் நீங்கள் இருக்க மாட்டீர்கள்’ என்று சரவணன் மிகக் கோபமாக சொல்லிவிட்டு அந்த விழாவிற்கு சென்றார்.

kamal4
kulatheivam rajagobal

குலதெய்வம் ராஜ கோபால் இல்லாமலேயே அந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதே நேரத்தில் ஏவிஎம் தயாரித்த குலதெய்வம் படத்தில் அறிமுகமான ராஜகோபால் அன்றிலிருந்து ஏவிஎம் நிறுவனத்திடமிருந்து விலக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க : இவன் நமக்கு செட் ஆக மாட்டான்… ரஹ்மானை கண்டபடி திட்டிய பாரதிராஜா… ஆனா கிடைச்சதோ மாஸ் ஹிட் பாடல்!!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.