தமிழ் சினிமாவிலேயே லக்கியான ஹீரோ இவர்தானாம்!.. ஏன்னு தெரியுமா?..
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் இவர்களுடன் அதிக படங்கள் நடித்து புகழை அடைந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. 80களில் கனவு நாயகியாகவே வலம் வந்தார். ரஜினியுடன் நடித்த பெரும்பாலான படங்கள் அனைத்துமே செம ஹிட் அடித்தன.
கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்த ஸ்ரீதேவிக்கு பிறகு ஏராளமான படங்களில் கமலுக்கு ஜோடியாக நடித்த பெருமை ஸ்ரீபிரியாவையே சேரும். ரஜினி, கமல் வாழ்க்கை வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஸ்ரீபிரியாவை பற்றி இல்லாமல் இருக்காது.
அந்த அளவுக்கு அவர்களோடு நீண்ட நாள் பயணித்தவர். ஸ்ரீபிரியா இல்லாத ரஜினி, கமல் படங்களே இல்லை என்றளவுக்கு உச்சத்தை தொட்டவர் இவர். இவர் அறிமுகமான படமான ‘முருகன் காட்டிய வழி’ . இந்தப் படத்தை ஏ.பி,மாதவன் இயக்க ஏவி.எம்.ராஜன் , நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
ஸ்ரீகாந்த் நடிக்க இருந்த படத்தில் முதலில் பேசப்பட்டது கமல்ஹாசனைத்தானாம். நடிக்க வரும் நேரத்தில் மலையாளத்தில் கமல் அப்பவே மிகவும் பிஸியாக இருந்த காரணத்தால் அதன் பிறகே ஸ்ரீகாந்த் நடித்தாராம். ஸ்ரீபிரியாவிற்கு ஜோடியாக ஸ்ரீகாந்த் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.
இதை பற்றி சிலர் பேசும் போது ‘ஸ்ரீகாந்த் மிகவும் லக்கியான நடிகர் என்றும் ஜெயலலிதா அறிமுகமான வெண்ணிறாடை திரைப்படத்தில் ஜெயலலிதாவிற்கு ஜோடியாக ஸ்ரீகாந்த் தான் நடித்திருப்பார். அதன் பிறகு ஜெயலலிதாவின் சினிமா பயணமே பெரும் உச்சத்தை அடைந்தது என்றும்,
உன் முதல் படத்திற்கும் அவர் தான் ஜோடியாக நடிக்கிறார். ஆகவே உன் எதிர்காலமும் யாரும் எதிர்பாராத அளவில் புகழை அடைய காத்திருக்கிறது’ என்றும் கூறினார்களாம். இதைப் பற்றி ஸ்ரீபிரியா ஒரு பேட்டியில் கூறும் போது ‘அவர்கள் கூறியது உண்மைதான், ஸ்ரீகாந்த் ஒரு லக்கியான நடிகர் தான். அவருடன் நடித்த பிறகு என் எதிர்காலமே வெளிச்சமாகிவிட்டது’ என்று கூறினார். இந்தப் படத்தை தொடர்ந்து முதன் முதலாக கமலுடன் ‘அவள் ஒரு தொடர் கதை’ என்ற படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார் ஸ்ரீபிரியா.
இதையும் படிங்க : சரிதாவிற்காக தன் மனைவியின் தாலியை அடகுவைத்த தயாரிப்பாளர்!.. இப்படியும் இருந்திருக்காங்களா?..