ஜெயிலுக்கு போயிட்டு வந்த நடிகருடன் நடிக்க மறுத்த நடிகைகள்!..துணிந்து நடித்த நடிகை யார் தெரியுமா?..
ஒரு நடிகையாக, நாட்டிய மங்கையாக அழகு பதுமையாக, சர்க்கஸில் சாதனை பெண்மணியாக புகழ் பெற்று விளங்கியவர் நடிகை பி.எஸ்.சரோஜா. 1960களில் பெரும் புகழை பெற்று விளங்கினார். ‘மதனகாமராஜன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அறிமுகமானார்.
அதன் பின் மகாமாயா, விகடயோகி, விசித்திர வனிதா போன்ற பல படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார் பி.எஸ்.சரோஜா. மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மேலும் சிவாஜி மற்றும் எம்ஜிஆர் ஆகியோர் இணைந்து நடித்த ஒரே ஒரு படம் ‘கூண்டுக்கிளியில்’ எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தார் பி.எஸ்.சரோஜா. இது மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அனைத்து முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.
இதையும் படிங்க : தனுஷ் தவறவிட்ட ஷங்கர் திரைப்படம்… பின்னாளில் சூப்பர் ஹிட் ஆன தரமான சம்பவம்…
திருமணமாகி நடிக்கவே மாட்டேன் என்று தன் கணவருக்கு பணிவிடை செய்வதே என் பணி என்று இருந்தார் சரோஜா. ஒரு சமயத்தில் கார் ஆக்ஸிடெண்டில் கணவர் இறக்கவே பல பேர் நிர்பந்தத்தில் மீண்டும் நடிக்க வந்தார். நடிக்கும் போது எப்படியாவது பாகவதருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் இருந்த சரோஜாவுக்கு அந்த வாய்ப்பும் வந்தது. இருவரும் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆனார்கள். ஆனால் அந்த நேரத்தில் தான் ஜெயகாந்தன் கொலைவழக்கில் பாகவதர் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு சென்றார்.
அவர் வரும் வரை காத்திருந்தார் சரோஜா. ஆனால் பாகவதர் ஜெயிலுக்கு போனதால் அவருடன் நடிக்க பல பேர் தயங்கியிருக்கின்றனர். சரோஜா மட்டும் ஏதோ ஒரு வழக்கில் இப்படி ஆகிவிட்டது.இதனால் என்ன என்று அவருடன் சேர்ந்து நடித்திருக்கிறார். பின்னாளில் சரோஜா-பாகவதர் இணைந்து நடித்த படம் தான் ‘அமரகவி’ திரைப்படம். இந்த சுவாரஸ்ய தகவலை இயக்குனரும் நடிகருமான மனோபாலா நம்மிடையே பகிர்ந்தார்.