சிவாஜியெல்லாம் வச்சி படம் எடுக்க மாட்டேன்.. கோபத்தில் சீரிய இயக்குனர்..
தமிழில் உச்சம் தொட்ட நடிகர்களில் இன்றளவும் நம் மனதை விட்டு நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். “பராசக்தி”யில் தொடங்கி “படையப்பா” வரை மூன்ற தலைமுறைகளாக நடித்த மாபெரும் கலைஞர்.
அவரின் படங்கள் பெரும்பாலும் ‘ப’ வரிசையிலேயே தான் எடுக்கப்பட்டிருக்கும். விதியின் விளையாட்டும் ‘ப’ வில் தொடங்கிய அவரின் சினிமா பயணத்தை ‘ப’ விலேயே முடிக்க வைத்திருக்கிறது. எம்ஜிஆர், சிவாஜி என இரு ஆளுமைகளாக சினிமாவை ஆட்சிச் செய்து கொண்டிருந்தனர்.
எம்ஜிஆரை வைத்து படம் எடுப்பதற்காகவே சில கூட்டம் இருக்கும். அதே போல் சிவாஜியை வைத்தே படம் எடுக்க ஒரு கூட்டம் இருக்கும். ஆனால் பெரும்பாலும் சிவாஜியை வைத்து படம் எடுத்த இயக்குனருக்கு எம்ஜிஆர் வாய்ப்பு கொடுக்க மாட்டார். அதே போல் தான் சிவாஜியும். எம்ஜிஆரை வைத்து படம் எடுத்த இயக்குனர்களுக்கு இவரும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்.
இப்படி சென்று கொண்டிருந்த காலத்தில் ஏவிஎம் ஒரு கதையை தயார் செய்து யாரை நடிக்க வைக்கலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தது. இதற்கு சில மாதங்கள் முன்பு தான் ஏவிஎம் நிறுவனத்தால் சிவாஜி தவிர்க்கப்பட்டு வந்தாராம். என்ன காரணம் என்று சரவணன் சொல்லவில்லை.
அப்பொழுதெல்லாம் முதலில் கதைக்கான ஆலோசனைகள் எல்லாம் முடிந்த பிறகு தான் நாயகர்களை தேடும் படலம் நடக்கும். ஆனால் இப்பொழுதுள்ள சூழ்நிலையே வேற. நடிகர்களுக்காகவே கதைகளை தயார் செய்ய வேண்டியிருக்கு. உடனே ஏவிஎம் குமரன் ஜெமினி என்று சொல்ல சரவணனோ சிவாஜியின் பெயரை பரிந்துரை செய்கிறார்.
சிவாஜி பெயரை சொன்னதும் மெய்யப்பச்செட்டியார் சரி அவரையே ஓகே பண்ணிடலாம் என்று சொல்லிவிட்டு சரவணனிடம் ‘ நீ சிவாஜியிடம் போய் படத்திற்கான விபரங்களை சொல்லிவிட்டு வா’ என்று அனுப்புகிறார். சரவணனும் சிவாஜியின் வீட்டிற்கு சென்று கதையை பற்று சொல்கிறார். உடனே சிவாஜி ‘யார் இயக்குனர்’ என்று கேட்க, பஞ்சு அருணாச்சலம் என்று சொன்னதும் சிவாஜிக்கும் ஷாக்.
இதையும் படிங்க : அந்த நடிகரே நிராகரித்த கதை!.. அஜித்துக்கே விபூதி அடிக்க பார்த்த விக்னேஷ் சிவன்!…
அவரா? சரி வராதே என்று சொல்கிறார்.அதன் பிறகு சரவணன் பேசி சம்மதிக்க வைத்திருக்கிறார். இந்தப் பக்கம் பஞ்சு அருணாச்சலத்திடம் சிவாஜி நடிக்க நீங்கள் தான் டைரக்ட் செய்யப் போகிறீர்கள் என்று சொன்னதும் ‘சிவாஜியா? அவனுக்கெல்லாம் நான் படம் பண்ண மாட்டேன்’ என்று கோபத்துடன் சொன்னாராம். ஏனெனில் ‘குங்குமம்’ திரைப்படத்தின் போது இவர்களுக்குள் ஏதோ மனக்கசப்பு இருந்ததாம். அதனாலேயே இருவரும் முதலில் யோசிக்க பின்னாளில் படப்பிடிப்பு சமயத்தில் இணை பிரியாத தோழர்கள் போல் ஆகிவிட்டார்களாம். பின்னாளின் இந்தக் கதை தான் ‘உயர்ந்த மனிதன்’ ஆக உதயமானது. இதை ஏவிஎம் சரவணன் ஒரு பேட்டியின் போது கூறினார்.