தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினி. எம்ஜிஆருக்கு அடுத்தப் படியாக மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள நடிகராக ரஜினி திகழ்ந்து வருகிறார். சாதாரண மனிதராக இருந்து பாலசந்தரால் ஈர்க்கப்பட்டு சினிமாவிற்குள் நுழைந்தவர்.
ஆரம்பகாலங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடித்த ரஜினி கொஞ்சம் கொஞ்சமாக துணை நடிகர், கதாநாயகன் என படிப்படியாக வளர்ந்தவர். கமல் பீக்கில் இருக்கும் போது கமலை பார்த்து பயந்தவர் ரஜினிகாந்த்.
இப்பேற்பட்ட புகழுடைய நடிகர் சினிமாவில் இருக்கும் போது நம்மால் சாதிக்க முடியுமா? என்ற தயக்கம் ரஜினியிடம் இருந்ததாக பல மேடைகளில் கூறியிருக்கிறார். ஆனால் இன்று கமலை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள நடிகராகவும் விளங்கி வருகிறார்.
ஒரு கட்டத்தில் வளர்ந்த பிறகு தனக்கு பக்கபலமாக இருந்தவர்களுக்காகவும் நலிந்த கலைஞர்களுக்காகவும் ஒரு படம் பண்ண வேண்டும் என ரஜினி விரும்பினார். அந்தப் படத்தினால் வரும் லாபத்தை ரஜினி எடுத்துக் கொள்ளாமல் அந்த நபர்களுக்காக கொடுக்க வேண்டும் என விரும்பினார்.
அப்படி பட்ட படம் தான் ‘அருணாச்சலம்’. அந்தப் படத்தை ரஜினிதான் தயாரித்திருந்தார். இந்த படத்தில் ஒரு பாட்னராக பழம்பெரும் இயக்குனரான ஸ்ரீதரை சேர்க்க வேண்டும் என விரும்பிய ரஜினி இந்த விஷயத்தை ஸ்ரீதரிடம் தெரிவிக்க சென்றார்.
அப்போது ஸ்ரீதர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். அவரிடம் ‘அருணாச்சலம் என்ற படத்தை எடுக்கப் போவதாகவும் ஏன் அந்த படத்தை தயாரிக்கப் போகிறேன் என்பதையும் கூறிய ரஜினி நீங்கள் ஒரு பைசா கூட முதலீடு போடவேண்டாம், அதில் வரும் லாபத்தை பிரித்துக் கொள்ளலாம், நீங்கள் பாட்னராக மட்டும் இருந்தால் போதும்’ என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : அவரை போல நானும் பெரிய ஸ்டார் நடிகர் ஆவேனா?!.. நடிகையின் அம்மாவிடம் புலம்பிய ரஜினி….
அதற்கு பதிலளித்த ரஜினி ‘எனக்கு இன்னும் என் மூளை ஊசி போகல ரஜினி, அதனால் வரும் இனாம் எனக்கு வேண்டாம்’ என்று கெத்தாக சொல்லிவிட்டாராம்.இந்த சுவாரஸ்ய சம்பவத்தை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…