ஏற்ற இறக்கத்துடன் பாட பாடகர் எடுத்த முடிவு!.. சிவாஜி படப்பிடிப்பில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..
தமிழ் சினிமாவின் முதல் திரைப்பட பின்னனி பாடகர் தான் திருச்சி லோகநாதன். பல திரையிசை பாடல்களை பாடியுள்ளார். இவர் முதன் முதலில் பாடிய பாடல் ‘வாராய் நீ வாராய்’ என்ற பாடல். இந்தப் பாடல் இன்று வரை மிகவும் பிரபலமான பாடல் லிஸ்டில் அமைந்திருக்கும் அற்புதமான பாடலாகும்.
தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள திருச்சி லோகநாதனின் மகனும் ஒரு திறமையான பாடகரும் ஆவார். பக்திப் பாடல்கள் பல இவர் பாடியவையாக அமைந்துள்ளன. எந்த ஒரு விழாவாகட்டும், திருவிழாவாகட்டும் முதலில் ஒலிக்கும் பாடலான ‘அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம் ’ என்ற விநாயகர் பாடலை பாடிய டி.எல்.மகாராஜன் தான் திருச்சி லோகநாதனின் மகன் ஆவார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன் தந்தையை பற்றியும் அவரது திறமையை பற்றியும் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார். அதாவது திருச்சி லோகநாதன் ஒரு படத்தில் ஹீரோவுக்காக ஒரு பாடலை பாடினார் என்றால் அதே படத்தில் நடிக்கும் நகைச்சுவை நடிகருக்காக பாடமாட்டாராம்.
அதே போல் தான் நகைச்சுவை நடிகரின் பின்னனி குரலில் பாடினால் அதே படத்தில் நடிக்கும் ஹீரோவுக்கு பின்னனி குரல் பாடமாட்டாராம். காரணம் குரல் வித்தியாசம் தெரியும் என்பதால் தானாம். மேலும் மிகவும் கறார் பேர்வழியாம் திருச்சு லோகநாதன். சிவாஜியின் நடிப்பில் வெளியான படம் ‘கப்பலோட்டிய தமிழன்’.
இந்தப் படத்தில் மூன்று பாடல்களை திருச்சி லோகநாதன் தான் பாடியிருக்கிறாராம். அதில் ஒரு பாட்டை மிகவும் ஹைபிட்ச்சில் பாடவேண்டுமாம். மேலே இழுத்து அதன் பின் சுருதி குறைந்து கீழே வர வேண்டுமாம். அந்தப் பாடலை அப்படியே பாடியவர் பாடி முடித்ததும் மயங்கி சுருண்டு விழுந்து விட்டாராம்.
அதன் பின் அவரிடம் கேட்டதற்கு ஹைபிட்ச்சில் பாட வேண்டியது இருந்தால் நாள் முழுவதும் சாப்பிடவில்லை என்று கூறினாராம். இவரின் தொழில் பக்தியை பார்த்த அனைவரும் மெய்சிலிர்த்து விட்டனராம். மேலும் டி.எம்.சௌந்தரராஜனை அறிமுகப்படுத்திய பெருமையும் திருச்சி லோகநாதனையே தான் சேரும்.
இதையும் படிங்க : கண்ணதாசன், வாலி அதிர்ஷ்டம் பண்ணவங்க!.. வைரமுத்துவின் பேச்சுக்கு வாலி ரியாக்ஷன் இதுதான்!..
இவர் பாடிய மற்றும் சில பாடல்களான கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்), அடிக்கிற கைதான் அணைக்கும் (வண்ணக்கிளி), புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே (பானை பிடித்தவள் பாக்கியசாலி), ஆசையே அலைபோலே (தை பிறந்தால் வழி பிறக்கும்) போன்ற பிரபலமான பாடல்கள் எல்லாம் இவரின் குரல் மூலம் பாடப்பட்டவையே.