Home News Reviews Throwback Television Gallery Gossips

கோலாகலமாக நடந்த வெற்றிவசந்த் – வைஷ்ணவி திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்

Published on: November 28, 2024
vetri vasanth
---Advertisement---

Vetrivasanth: சின்னத்திரையில் பிரபல சீரியல் நாயகன் வெற்றி வசந்த் மற்றும் விஜய் டிவியின் பொன்னி சீரியல் நாயகி வைஷ்ணவி திருமணம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது.

சின்னத்திரை நாயகர்களில் சிலருக்கு தான் மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவாகும். தற்போது அந்த லிஸ்டில் முக்கிய இடத்தில் இருப்பவர் வெற்றி வசந்த். சின்ன சின்ன கதாபாத்திரங்கள் நடித்து வந்த வெற்றி வசந்திற்கு சிறகடிக்க ஆசை தொடர் மூலம் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: எதிர்நீச்சல் நடிகர் பேத்தியின் திருமணம்!. அடேங்கப்பா இம்புட்டா!. உடம்பு முழுக்க தங்கம்தான்!

பார்க்க விஜய் சேதுபதி போல் இருக்கும் அவரை சின்னத்திரை விஜய் சேதுபதி என ரசிகர்கள் அழைக்க தொடங்கினர். அவருக்கு கிடைத்த புகழால் சிறகடிக்க ஆசை தொடரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற தொடங்கியது. தற்போது வரை அந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக வெற்றி வசந்த் இருக்கிறார்.

vetri vasanth
vetri vasanth

சமீபத்தில் இவர் விஜய் டிவி நாயகியான வைஷ்ணவியை காதலிப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுக்கு அறிவித்தார். ஆச்சரியமான இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். தொடர்ந்து அடுத்த சில நாட்களில் வைஷ்ணவி மற்றும் வெற்றி வசந்தின் நிச்சயதார்த்த விழா நடந்து முடிந்தது.

இதையும் படிங்க: மரணபயத்த காட்டிட்டான் பரமா! ‘அமரன்’ படத்தால் பீதியில் இருக்கும் சிவகார்த்திகேயன்

vetri vasanth
vetri vasanth