வெற்றி வசந்த் பெயரில் மோசடியா? சின்னத்திரை விஜய்சேதுபதியே கடுப்பாகி போட்ட வீடியோ!..

by Akhilan |
வெற்றி வசந்த் பெயரில் மோசடியா? சின்னத்திரை விஜய்சேதுபதியே கடுப்பாகி போட்ட வீடியோ!..
X

சின்னத்திரையில் டாப் ஹிட்ஸ் சீரியலாக இருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில் முத்துவாக நடித்தவரும் வெற்றி வசந்த் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

சில நடிகர்களுக்கு தான் கிடைக்கும் முதல் வாய்ப்பே பெரிய புகழை பெற்று கொடுக்கும். அதுப்போல தான் வெற்றி வசந்துக்கும். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடரான சிறகடிக்க ஆசையில் முத்துவாக நடித்து வருகிறார். இத்தொடரில் அவருக்கு தான் ரசிகர்கள் அதிகம்.

வெற்றி வசந்த் இவ்வளவு எளிதில் உயர்ந்ததுக்கு அவரின் தோற்றமும் ஒரு முக்கிய காரணம். அவர் பார்ப்பதற்கு விஜய் சேதுபதி போலவே இருப்பதால் அவரை சின்னத்திரை விஜய் சேதுபதி எனவும் ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர். இந்நிலையில் வெற்றி வசந்த் தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அதாவது வெற்றிவசந்த் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் மூலம் ரசிகைகளிடம் ஆபாசமாக பேசியதாக தகவல்கள் வந்தது. அந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் விதமாக தற்போது வெற்றி வசந்த் எனக்கு ஃபேஸ்புக்கே இல்லை. ஆரம்பத்தில் தொடங்கி சில பதிவுகளை வெளியிட்டேன். தற்போது அதை டெலிட் செய்து விட்டேன்.

எனக்கு தற்போது இன்ஸ்டாவில் மட்டுமே அக்கவுண்ட் இருக்கிறது. என் பெயரில் பேஸ்புக்கில் உலா வருவது போலி கணக்கு தான். இதை நம்பி யாரும் ஏமாந்துவிடாதீர்கள். நான் யாரிடமும் இன்ஸ்டாவில் இருந்தே பேச மாட்டேன். வாட்ஸ் அப்பில் பேசுவதும் எனக்கு பிடிக்காது.

தேவைப்பட்டால் கால் செய்து பேசிவிடுவேன். நான் பேசுவதாக சொல்லி எந்த கணக்கில் இருந்து மெசேஜ் வந்தாலும் நம்ப வேண்டாம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது வைரலாகும் இந்த வீடியோவில் ரசிகர்கள் அவருக்கு ஆறுதலை, ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வீடியோவைக் காண: https://www.instagram.com/p/C9g3s7QRcOR/

Next Story