More
Categories: Cinema History Cinema News Entertainment News latest news

ஒரு நாளைக்கு 170 சிகரெட் பிடித்தேன்… வாரணம் ஆயிரம் படம் என்னை மாற்றியது… சீக்ரெட் பகிர்ந்த வெற்றிமாறன்

தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனரான வெற்றி மாறன் தனக்கு ஒரு நாளைக்கு 170 சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறி இருக்கிறார்.

தனுஷ் நடிப்பில் வெளியான படம் பொல்லாதவன். தனுஷை பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களிடம் கொண்டு சென்றது அப்படம் தான். இதை இயக்கிய இயக்குனர் வெற்றி மாறன் அப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் தான் ஒரு நாளைக்கு 170க்கும் அதிகமாக சிகரெட் பிடித்தேன் எனக் கூறி இருக்கிறார்.

Advertising
Advertising

மேலும், 13 வயதில் சிகரெட் பிடிக்க தொடங்கிய அவர், தொடர்ந்து தனது 33 வரை அப்பழக்கத்தை வைத்திருந்தாராம். ஒரு கட்டத்தில் ஏகத்துக்கும் அதிகமாக சிகரெட் அவரை ஆட்கொண்டு விட்டதாம். உதவி இயக்குனர்கள் தான் சார் 160க்கும் அதிகமாக சிகரெட் பிடித்து இருக்கிறீர்கள். இப்படியே சென்ற நேரம் என் உடலே ஐயோ போதும் சாமி நிறுத்து என சொல்லும் அளவு இருந்தது.

எனக்கே இதை விட வேண்டும் என தோன்றியது. உடனே மருத்துவரை சந்தித்தேன். அவரிடம் தான் சிகரெட் பழக்கத்தில் ஊறி விட்டேன். இதயத்தை ஆஞ்சியோ எடுத்து பார்க்கலாமா எனக் கேட்டேன். அவர் அதுவெல்லாம் தேவை இல்லை. பழக்கத்தை விடுங்கள் எனக் கூறினார். இருந்தும் தான் ஆஞ்சியோ எடுத்து பார்த்தேன். எந்த பாதிப்பும் இல்லை என ரிப்போர்ட் வந்த பின்னரே மனது நிம்மதியாக இருந்தது. இருந்தும் அப்பழக்கம் என்னிடம் தொடர்ந்தது.

அப்போது தான் இந்திய அணியின் ஃபிட்னஸ் கோச் பாசு ஷங்கரிடம் உதவி கேட்டேன். அவரிடம் 6 மாதங்கள் ஃபிட்னஸ் பயிற்சி எடுத்தேன். இருந்தும் என்னால் அந்த பழக்கத்தை விட முடியவில்லை. தொடர்ந்து, ஒன்று அல்லது இரண்டு என இருந்தது. அப்பொழுது வாரணம் ஆயிரம் படத்திலும் இந்த சிகரெட் பழக்கம் எல்லாம் இருப்பதாக கதையமைப்பு இருந்தது. நானும் அப்படத்தை பார்க்க சென்றேன். அப்படம் பார்த்து விட்டு வெளிவந்தப்பின் ஒரு சிகரெட் பிடித்தேன். அதை முடிக்கும் முன்னர் இதுதான் எனது கடைசி சிகரெட் என நினைத்து அடித்து முடித்தேன். அதன்படி, இன்று வரை நான் சிகரெட்டை தொடுவதே இல்லை எனக் கூறி இருக்கிறார்.

Published by
Manikandan

Recent Posts