விஜய் படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?... வேற லெவலுக்கு சென்ற வெற்றிமாறன்.....

vetri

தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என கவனிக்கத்தக்க சிறந்த திரைப்படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். இவர் இயக்கும் திரைப்படங்கள் விருதுகளை குவிக்கும். அசுரன் படத்திற்கு தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். வெற்றிமாறனுக்கும் விருது கிடைத்தது.

vetri-maaran

தற்போது சூரி - விஜய் சேதுபதியை வைத்து ‘விடுதலை’ படத்தை அவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பின் அவர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியானது.

vaadi-vaasal

இந்நிலையில், விஜயும் - வெற்றிமாறனும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர். இப்படம் விவசாயம் தொடர்பான கதை எனக்கூறப்படுகிறது. இப்படத்திற்காக வெற்றிமாறனுக்கு ரூ.25 கோடி சம்பளமும் பேசப்பட்டுள்ளதாம். விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

அப்படத்தை முடித்தபின் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு பின்னரே அவர் வெற்றிமாறன் படத்தில் நடிக்கவுள்ளார்.

vijay-3

அதேபோல் , அடுத்து சூர்யா ‘அண்ணாத்த’ பட இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். எனவே, அப்படத்திற்கு பின்பே அவர் ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் எனத்தெரிகிறது.

எனவே, விஜய்க்காக காத்திருக்கும் நிலையில் வெற்றிமாறன் இருக்கிறார். ஆனால், அது பரவாயில்லை இப்படத்திற்கான வேலைகளுக்கு எனக்கு கால அவகாசம் முக்கியம் தாமதாமானால் பரவாயில்லை என்கிறாராம் வெற்றிமாறன்.

 

Related Articles

Next Story