வெற்றிமாறன் இல்லைன்னா பா.ரஞ்சித்தே இல்லை?... அப்படி என்ன பண்ணார் தெரியுமா?
வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராக திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமல்லாது சமூகத்தில் நிலவும் ஜாதிய, பொருளாதார ஏற்றுத்தாழ்வுகளை விமர்சிக்கும் வகையிலும், அதிகாரவர்க்கத்தை எதிர்க்கும் வகையிலும் சமீப காலமாக அவர் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார். இதனால் வெற்றிமாறனுக்கு ஒரு பக்கம் பாராட்டுகள் குவிந்தாலும் அவரை விமர்சிப்பவர்களும் உண்டு.
பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸ்
வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் சூரியை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளும் மிக உருக்கமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறிவருகின்றனர்.
காவல்துறையின் அட்டூழியங்களை காட்டும் அதே சமயம், காவல்துறையில் கீழ் நிலையில் பணியாற்றும் காவலர்களில் பரிதாப நிலையையும் படம்பிடித்து காட்டியுள்ளார் வெற்றிமாறன்.
பா.ரஞ்சித்தின் வாழ்வில் வெற்றிமாறன்…
“விடுதலை” முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்காக மிகவும் ஆவலோடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் வெற்றிமாறன், பா.ரஞ்சித்தின் வாழ்க்கையில் மறைமுகமாக ஒளியேற்றிவைத்ததை குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
பா.ரஞ்சித் சமூகத்தில் நிலவும் சாதி வேற்றுமைகளை மையமாக வைத்து பல திரைப்படங்களை இயக்கி வருகிறார். தற்போது விக்ரமை வைத்து “தங்கலான்” திரைப்படத்தை மிகவும் மும்முரமாக உருவாக்கி வருகிறார்.
பா.ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படம் “அட்டக்கத்தி”. இத்திரைப்படத்தை வெளியிட முதலில் எந்த விநியோகஸ்தர்களும் முன் வரவில்லை. அப்போது வெற்றிமாறன், தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜாவை அழைத்துக்கொண்டு அத்திரைப்படத்தை பார்த்திருக்கிறார். அத்திரைப்படத்தை வெற்றிமாறன் மிகவும் ரசித்து ரசித்து பார்த்தாராம். வெற்றிமாறனுக்கு அத்திரைப்படம் மிகவும் பிடித்துப்போனதனால்தான் அத்திரைப்படத்தை தனது ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல்ராஜா வாங்கி வெளியிட்டிருக்கிறார்.