வெற்றிமாறனை முதுகில் குத்திய பிரபல இசையமைப்பாளர்… அன்னைக்கு மட்டும் அது நடந்திருந்ததுன்னா!!

by Arun Prasad |   ( Updated:2023-04-02 00:35:46  )
Vetrimaaran
X

Vetrimaaran

வெற்றிமாறனின் “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் 31 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சூரி முதன்முதலில் கதாநாயகனாக இத்திரைப்படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். அவரின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருந்ததாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

சூரி இதற்கு முன் ஒரு நகைச்சுவை நடிகராக இருந்தார் என்பதே ஞாபகம் வரவில்லை என்றும் அந்த அளவுக்கு ஒரு அனுபவமிக்க நடிகராக நடித்திருக்கிறார் என்றும் பல விமர்சகர்கள் சூரியின் நடிப்பை புகழ்ந்து வருகிறார்கள்.

முதுகில் குத்திய இசையமைப்பாளர்

வெற்றிமாறன் தொடக்கத்தில் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் என்பதை பலரும் அறிவார்கள். பாலு மகேந்திரா தனுஷை வைத்து, “அது ஒரு கனா காலம்” என்று ஒரு திரைப்படத்தை இயக்கியிருந்தார். அத்திரைப்படத்தில் வெற்றிமாறன் உதவி இயக்குனராக பணியாற்றியபோதே வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து வெற்றிமாறன் தனுஷை வைத்து “தேசிய நெடுஞ்சாலை” என்று ஒரு திரைப்படத்தை இயக்குவதாக இருந்தார். அத்திரைப்படத்திற்கு தயாரிப்பாளர்கள் அமையவில்லை. அப்போது ஒரு மிகப் பிரபலமான இசையமைப்பாளர் ஒருவரை வெற்றிமாறன் அணுகியிருக்கிறார்.

அந்த பையன் வேண்டாம்…

வெற்றிமாறன் தாடி வைத்துக்கொண்டு கசங்கிய சட்டை அணிந்துகொண்டு போயிருக்கிறார். வெற்றிமாறன் அணிந்திருந்த உடையை பார்த்து முகம் சுழித்தாராம் அந்த இசையமைப்பாளர். அதன் பின் தனுஷிடம் தொடர்புகொண்டு “இந்த பையன் சரிவரமாட்டான். வேற இயக்குனருக்கு படம் பண்ணாத்தான் சரியா இருக்கும்” என கூறினாராம்.

ஆனால் தனுஷ் அந்த இசையமைப்பாளரின் பேச்சை கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லையாம். தொடர்ந்து வெற்றிமாறனை பல தயாரிப்பாளர்களிடம் அனுப்பியிருக்கிறார் தனுஷ்.

அவ்வாறுதான் எஸ்.கதிரேசன் என்பவர் வெற்றிமாறனுக்கு ஓகே கூறியிருக்கிறார். ஆனால் “தேசிய நெடுஞ்சாலை” கதையை வேண்டாம் என்று கூறிவிட்டு வேறு கதையை தயார் செய்ய சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர். அப்படி அவர் எழுதிய கதைதான் “பொல்லாதவன்”.

இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், “தேசிய நெடுஞ்சாலை” கதைதான் பின்னாளில் “உதயம் NH4” என்ற பெயரில் திரைப்படமாக உருவானது.

Next Story