பிளாக்பஸ்டர் இயக்குனரின் இன்னொரு முகம்..!.. இதுவரை வெளிவராத தகவல்.....

by Rohini |
vetr1_main_cine
X

பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் துறையில் அறிமுகமாகி வெற்றி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். தனுஷ் கூட்டணியில் உருவான இப்படம் பெரும் வெற்றியை பெற்றது.அடுத்து இவரை வைத்து ஆடுகளம் படத்தை இயக்கினார். இப்படம் மதுரை நகர மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படம்.

vetri1_cine

இப்படத்திற்காக நிறைய தேசிய விருதுகள் கிடைத்தது. தனுஷ் இப்படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். வெற்றிமாறனுக்கும் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் தான் தனுஷின் சினிமா வாழ்க்கை புரட்டிப் போட்டது.

vetri2_cine

அடுத்து தனுஷை வைத்து வடசென்னை, அசுரன் போன்ற தரமான படங்களை சினிமாவிற்கு தந்தார். இவர் இயக்கிய படங்களால் சினிமா வட்டாரத்தில் ஒரு வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனிடையில் வெற்றிமாறன் ஒரு கலைப்பள்ளியை ஆரம்பித்து பொருளாதார ரீதியில் நலிவடைந்த குழந்தைகளை இனம் கண்டு இப்பள்ளியில் கலை சம்பந்தப்பட்ட பயிற்சி கொடுத்து அதில் சிறந்து விளங்குபவர்களுக்கு இயக்குனர் ஆகும் வாய்ப்பு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்கள் : நயன்தாரா கூட நடிக்க ‘அந்த’ ஹீரோ ரெம்ப யோசிச்சார்., ஆனா, படம் சூப்பர் டூப்பர் ஹிட்.!

vetri3_cine

இப்பள்ளிக்கு திரைத்துறையில் இருந்து கலைப்புலி எஸ்.தாணு 1 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. முதன்முதலில் நன்கொடை கொடுத்த நபரும் இவர்தானாம். வெற்றிமாறனின் இச்செயல் திரைத்துறை சார்ந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story