Connect with us

Cinema News

தனுஷை வச்சி ஒரு கே.ஜி.எஃப் கதை.. வெற்றிமாறன்தான் இயக்குனர்- தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்..!

கோலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்சமயம் ஹாலிவுட் வரை தனது நடிப்பு திறமையை காட்டியுள்ளார் தனுஷ். தனுஷின் அண்ணன் செல்வராகவனின் உதவியால் சினிமாவிற்கு வந்தாலும் தனது திறமையை கொண்டே கதாநாயகன் என்கிற இடத்தை சினிமாவில் தக்கவைத்துக்கொண்டார் தனுஷ்.

தனுஷ் நடித்த திரைப்படங்களில் ஆடுகளம், பொல்லாதவன்,கர்ணன், அசுரன் போன்ற திரைப்படங்கள் வெகுவாக பேசப்பட்ட திரைப்படங்கள். இவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியவை.

சினிமாவில் வெற்றிமாறன் வளர்ந்து வந்த அதே காலக்கட்டத்தில் தனுஷையும் அவர் சினிமாவில் வளர்த்துவிட்டார். வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களுமே நல்ல வெற்றியை கொடுத்தன.

வலம் வரும் கே.ஜி.எஃப் கதைகள்:

தற்சமயம் கே.ஜி.எஃப்ஃபை மையமாக வைத்து அதிகமாக திரைப்படங்கள் வர துவங்கிவிட்டன. சில நாட்களுக்கு முன்பு வந்த தசரா திரைப்படம் கே.ஜி.எஃப் சுரங்கத்திற்கு அருகில் வாழும் மக்களை பற்றி வந்தது. அதே போல விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படமும் கூட கே.ஜி.எஃப் பின்னணியில் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்சமயம் வெற்றிமாறனும் கே.ஜி.எஃப் பின்னணியில் ஒரு திரைப்படம் இயக்க இருக்கிறாரா. இந்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு பேட்டியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே அவர் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், வெற்றிமாறன் இப்படி ஒரு படம் இயக்கும் நிலையில் அது நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஒரே பாடலில் உலகப்புகழ் பெற்ற டி.எம். சவுந்தரராஜன்.. எந்த பாட்டு தெரியுமா?..

google news
Continue Reading

More in Cinema News

To Top