நான் சொன்னத மட்டும் செய்யுங்க!.. விஜய் சேதுபதியை அசிங்கப்படுத்திய இயக்குனர்....

பொல்லாதவன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அடுத்த திரைப்படமும் தனுஷை வைத்து ஆடுகளம் படத்தை இயக்கினார். அதன்பின் விசாரணை, வட சென்னை, அசுரன் என தமிழ் சினிமாவின் சிறந்த படங்களை இயக்கி சிறந்த இயக்குனராக மாறினார். அசுரன் திரைப்படம் சிறந்த நடிகர், இயக்குனர் என 2 தேசிய விருதுகளை பெற்றது.
தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் காவல் அதிகாரியாக சூரியும், கைதியாக விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர்.
விஜய் சேதுபதிக்கு ஒரு பழக்கம் உண்டு. இயக்குனரிடம் என்ன காட்சி எனக்கேட்பார். இயக்குனர் கூறுவதை கேட்டுவிட்டு அதை தனது ஸ்டைலில் நடிப்பார். அந்த நேரத்தில் அவருக்கு என்ன தோன்றுகிறதோ அப்படி நடிப்பார். பெரும்பாலான இயக்குனர்கள் அதை ஏற்றுக்கொள்வதால் அதையே தொடர்ந்து வருகிறார்.
விடுதலை படப்பிடிப்பில் வெற்றிமாறன் ஒரு காட்சியில் தான் கூறியதை விட்டுவிட்டு விஜய் சேதுபதி வேறு மாதிரி நடிப்பதை பார்த்து கடுப்பாகி விட்டாராம். எனவே, படப்பிடிப்பு குழுவினர் அத்தனை பேருக்கும் முன்னிலையில் ‘நான் சொல்ற மாதிரி மட்டும் நடிங்க சார். நீங்களா எதுவும் பண்ண வேண்டாம்’ எனக்கூறிவிட, விஜய் சேதுபதிக்கு அவமானமாக போய்விட்டதாம்.
ஆனாலும், கஷ்டப்பட்டு வாய்ப்பு கிடைத்து நடித்து சினிமாவில் பெரிய ஹீரோவாக வளர்ந்திருப்பதால் விஜய் சேதுபதி இதை புரிந்துகொள்வார் என படப்பிடிப்பு குழுவினர் கூறுகிறார்கள்.