வெற்றிமாறன் இயக்க இருந்த ரியல் ஸ்டோரி.. அட்லீ வசனம் எழுத நான் நடித்திருக்க வேண்டும்.. ஹீரோ சொன்ன சர்ப்ரைஸ்..!

Vetrimaran vs Atlee: தமிழ் சினிமாவில் சில கூட்டணி இணைவது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும். ஆனால் அது நடக்காமல் ரசிகர்களுக்கே ஏமாற்றத்தை கொடுத்து விடும். அப்படி ஒரு விஷயம் கோலிவுட்டில் நடந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர்களிலேயே கிராமப்புற கதையையும், சொல்லாத கதைக்களத்தையும் படமாக்கி வெற்றி பெறுவது தான் வெற்றிமாறன் ஸ்டைல். அப்படி அவர் இயக்கிய படங்கள் தேசிய விருது வரை வாங்கி கல்லா கட்டினார். தற்போது அவர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தினை இயக்க இருக்கிறார். இப்படத்தினை தொடர்ந்து அஜித்தை இயக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: தமிழ் டைரக்டருக்கு நோ.. மலையாள டைரக்டரை லாக் செய்த யாஷ்.. படம் பேரு என்ன தெரியுமா?

இது ஒரு புறம் இருக்க அட்லீயும் தன்னுடைய கேரியரில் செம ஹிட் இயக்குனராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் ஜவான் படத்தினை பாலிவுட்டில் இயக்கி இருந்தார். படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது. இதை தொடர்ந்து தற்போது அட்லீ ஹாலிவுட்டில் கால் பதிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது.

சமீபத்திய விழா ஒன்றில் அட்லீ கூட தான் விஜய் மற்றும் ஷாருக்கான் இருவருக்கும் இணைந்து ஒரு கதையை எழுதிக்கொண்டு இருக்கேன் என ஓபனாகவே சொல்லி இருந்தார். அட்லீ பெரும்பாலும் கமர்சியல் ஹிட் டைரக்டர் தான். வெற்றிமாறன் இவருக்கு நேர் எதிரான கதையை இயக்குபவர்.

இதையும் படிங்க: அறிமுகமாகி தொடர் மூன்று ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்த ஒரே ஹீரோ! அட இவரா?

அது வெற்றிமாறன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம். கிரிக்கெட்டை மையமாக வைத்து அந்த படம் உருவாக இருந்தது. கூட்டணி மிகப்பெரிய பெரியதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளரால் அந்த படம் பாதியிலேயே நடக்காமல் போய்விட்டது. எப்போது அந்த திரைப்படம் ரிலீஸானாலும், பெரிய வரவேற்பை பெறும். அந்த படத்திற்கு சரியான நேரம் வரும் போது ரிலீஸ் ஆகும் என நம்புவதாக தெரிவித்து இருக்கிறார்.

 

Related Articles

Next Story