என்ன மனுஷன்யா?.. உதவியாளர்களை கௌரவித்த வெற்றிமாறன்!.. என்ன செஞ்சார் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் எதாவது ஒரு விஷயம் டிரெண்டிங்காகி வருகின்றது. சமீபகாலமாக படத்தின் தயாரிப்பாளர்களோ இயக்குனர்களோ தன்னுடன் பணிபுரிந்த உதவியாளர்களுக்கு அன்பளிப்பை வழங்குவதும் ஒரு ஹீரோ இயக்குனருக்கு பரிசை வழங்குவதும் அன்றாடம் நடக்கும் முறையாக மாறிவிட்டது.
அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறனும் தன்னுடைய உதவியாளர்கள் 25 பேருக்கு ஒரு வித்தியாசமான அன்பளிப்பை வழங்கியுள்ளது சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தான் வெற்றிமாறன் விடுதலை படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடித்து புரோமோஷனில் கலந்து கொண்டு வருகிறார்.
படம் வருகிற 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்திற்காக கடந்த 2 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வந்த தன் உதவியாளர்கள் 25 பேருக்கு தலா 1கிரவுண்ட் நிலத்தை பரிசாக வழங்கியிருக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் அந்த நிலத்தில் வீடுகட்டவோ அல்லது விவசாயம் பண்ணவோ மட்டும் செய்ய சொல்லி அறிவுரையும் வழங்கியிருக்கிறாராம்.
இதுவரை கார், வாட்ச், பைக் போன்றவற்றையே பரிசாக வழங்கி வந்த நிலையில் வெற்றிமாறன் இது போன்ற செயலை செய்திருப்பது பிரபலங்கள் மட்டுமில்லாது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விடுதலை படத்தை அடுத்து வெற்றிமாறனின் லைன் அப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வரிசை கட்டிக் கொண்டு இருக்கின்றன.
இதையும் படிங்க : மினிமம் பட்ஜெட்.. பல கோடி லாபம்!.. அடுத்த படத்துக்கு கமல் போட்ட மாஸ்டர் பிளான்!…
வடசென்னை 2 , வாடிவாசல் போன்ற படங்களின் மீது வெற்றிமாறன் முதலில் கவனம் செலுத்தப் போகிறார். அதனை அடுத்து தான் மற்ற படங்களில் ஈடுபட போகிறார்.