அந்த படங்களை பார்த்தால் மன உளைச்சல் தான் அதிகரிக்கும்... வெற்றி மாறன் சொல்லும் சீக்ரெட்..
தனுஷிற்கு மிகப்பெரிய மார்க்கெட்டினை உருவாக்கிய ஆடுகளம் படத்தின் இயக்குனர் வெற்றி மாறனுக்கு ஒரு பழக்கம் இருக்கிறதாம். அது குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.
கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இணைந்தார். அவரின் முதல் திரைப்படமான பொல்லாதவன் ரசிகர்களிடம் மிகப்பெரிய ரீச்சை கொடுத்தது. ஒரு பைக்கை கொண்டு படமே எடுக்கலாம் என்பது அப்போதைய காலத்தில் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.
தொடர்ந்து, அதே தனுஷை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் தான் ஆடுகளம். அப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. தேசிய விருதையும் இப்படத்திற்காக வெற்றிமாறன் பெற்றார். காக்கா முட்டை, அசுரன், விசாரணை என இவரின் வெற்றி பட லிஸ்ட்கள் இன்னும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இத்தனை ஹிட் படங்களை கொடுத்த வெற்றிமாறனுக்கு அந்த படங்களை பார்த்ததே இல்லையாம்.
அதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது, ஒரு படத்தில் என்னால் முழு திருப்தி அடைய முடியாது. படத்தின் கடைசி பணிகள் முடிந்ததும் என்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்தி விடுவேன். இந்த படத்தினை திரையரங்கில் எல்லாம் பார்க்கவே மாட்டேன். அப்படி பார்த்தால் இந்த காட்சியை இப்படி எடுத்திருக்கலாமோ என யோசனை எழுந்து விடும். அது மன உளைச்சலை ஏற்படுத்தும். ஏன் டிவியில் பாடலை கூட இதுவரை கேட்டதே இல்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.