படம் டிராப்.. அவ்ளோதான்! எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வெற்றிமாறன்.. அவர்தான் காரணமா

by Rohini |   ( Updated:2024-04-11 22:10:38  )
vetri
X

vetri

Director Vetrimaran: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இயக்குனர் பாலுமகேந்திராவுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த வெற்றிமாறன் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே ஒரு ஆழமான கதையுடன் வந்து ரசிகர்களுக்கு செம விருந்து படைத்தார்.

அதுவும் தனுஷின் கூட்டணியில் படம் வேறலெவலில் சென்றது. அதிலிருந்தே தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி தமிழ் சினிமாவில் ஒரு எதிர்பார்க்கப்படும் கூட்டணியாக அமைந்தது. தொடர்ச்சியாக வடசென்னை, ஆடுகளம், அசுரன் போன்ற அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து யாருய்யா இந்த மனுஷன் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு வெற்றிமாறன் ரசிகர்களை திகைக்க வைத்தார்.

இதையும் படிங்க: அடடா மழைடா!.. தமன்னா எப்படி இருக்காரு பாருங்க!.. பையா 2 ஸ்டார்ட் பண்ற வழிய பாருங்க லிங்குசாமி!..

இன்னொரு பக்கம் தனுஷ் வேறொரு ரூட்டில் பாய வெற்றிமாறன் திடீரென ஒரு நாவலை எடுத்து படமாக்க எண்ணி வெளியானதுதான் ‘விடுதலை’. இந்தப் படத்தில் சூரியை கதாநாயகனாக்கினார். அந்தப் படமும் நல்ல வெற்றியை பதிவு செய்தது. அதில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தது படத்திற்கு கூடுதல் சிறப்பு.

இந்த நிலையில் விடுதலை 2 படம் இப்போது தயாராகிக் கொண்டிருக்கிறது. இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கான வேலைகளில்தான் இப்போது வெற்றிமாறன் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் வெற்றிமாறனிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது வடசென்னை 2 படம்.

இதையும் படிங்க: அந்த பயம் வந்துடுச்சு போல!.. வேட்டையன் படத்தோட கிளாஷ் விடாத விஜய்.. வம்பிழுத்த ரஜினி ரசிகர்!..

இதை பற்றி சமீபத்தில் ஒரு விழாவிற்கு கலந்து கொள்ள வந்திருந்த வெற்றிமாறனிடம் ரசிகர் ஒருவர் கேட்க ‘எனக்கு விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதியே எப்போ என தெரியவில்லை. அதுவும் எடுத்து முடித்த படம். இதுக்கே எனக்கு விடை தெரியல. இதற்கு பிறகு வாடிவாசல் பட வேலைகள் இருக்கிறது. அதன் பிறகு என்னென்ன என்பது இனிமேல் தெரியும். அதனால் வடசென்னை 2 நேரம் எடுக்கும்’ என்று கூறினார்.

இருந்தாலும் விடாமல் தொடர்ந்து ரசிகர் வடசென்னை 2 எந்த வருடம் ரிலீஸ் ஆகும் என்பதை மட்டும் சொல்ல முடியுமா? என்று கேட்க அதற்கு வெற்றிமாறன் ‘அவ்ளோதான். நேரம் எடுக்கும்னு சொன்னாலே அவ்ளோதான்’ என்று படம் வராது என்பதை சூசகமாக கூறினார். இன்னும் ஒரு சில பேர் வடசென்னை 2 படம் பற்றி தனுஷ் எந்த ஆர்வமும் காட்டவில்லை என்றும் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: தலைவர் பன்ச்சை விட இதுதான் ஃபேமஸ்.. ஒரே ஒரு டையலாக்கால் ரஜினியை மடக்கிய நிழல்கள் ரவி

Next Story