தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடிவந்தும் விடாமல் துரத்தும் வெற்றிமாறன்...! கதறும் விஜய் சேதுபதி..
தமிழ் சினிமாவில் தரமான இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். 2007 முதல் 2021 வரையில் மொத்தமாக 5 படங்கள் தான் இயக்கியுள்ளார். அந்த 5 திரைப்படங்களும் தரமானதாக இருக்கும். தனது திரைப்பட காட்சி தாம் நினைத்த மாதிரி வருவதற்கு எத்தனை நாட்கள் ஆனாலும், காத்திருந்து படமாக்குவார் இயக்குனர் வெற்றிமாறன்.
அதனால் தான் அவரது படங்கள் தனித்துவமாக இருக்கிறது. இவர் படத்தில் கதை தான் ஹீரோ. அதனால் தான் காமெடி நடிகர் சூரி நாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வரும் விடுதலை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்த நிலையில் எடிட்டிங் வேலையில் போய்க் கொண்டிருக்கிறது. அதே வேலையில் வெற்றிமாறன் தயாரிப்பில் இன்னொரு படம் அறம் படத்தின் இயக்குனர் ஒரு காட்டு பகுதியில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
வெற்றிமாறன் அங்கு போய் விடுதலை படத்தின் எடிட்டிங் வேலையை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் அங்கு உள்ள இடங்கள் பிடித்ததனால் விடுதலை படத்தின் மேலும் சில காட்சிகளை எடுக்கலாம் என முடிவில் இருப்பதாக தகவல் வெளியானது.அதனால் விஜய் சேதுபதியை அழைத்து இன்னும் 25 நாள்கள் கால்ஷீட் கேட்க மக்கள் செல்வனோ சார் எங்களை விட்டு விடுங்கள் என கெஞ்சியதாக கூறப்படுகிறது.