Connect with us

வெற்றிமாறன் காசு கொடுத்து தேசிய விருது வாங்கினாரா.?! ரசிகர்ளை ஷாக் ஆக்கிய செய்தி…

Cinema News

வெற்றிமாறன் காசு கொடுத்து தேசிய விருது வாங்கினாரா.?! ரசிகர்ளை ஷாக் ஆக்கிய செய்தி…

எப்போதும் சினிமா துறையில் இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று மாஸ் கமர்சியல் திரைப்படங்கள், இன்னொன்று விருதுக்காக சிறந்த கதைக்களங்களுக்காக எடுக்கப்படும் திரைப்படங்கள். இதில் ஒரு சில படங்களே சிறந்த படங்களாகவும் இருக்கும். அதே வகையில் நல்ல லாபம் தரக்கூடிய கமர்சியல் படமாகவும் இருக்கும்.

அப்படி இரண்டையும் ஒரே நேரத்தில் தட்டி தூக்கிய திரை கலைஞர் என்றால் அதை இயக்குனர் வெற்றிமாறன் தான். இவர்கள் திரைப்படங்கள் விருது வாங்கும் அளவிற்கு சிறந்த படைப்பாகவும் இருக்கும். அதே வேளையில் ரசிகர்கள் ரசிக்கும்படி நல்ல கமர்சியல் திரைப்படமாகவும் இருக்கும்.

இவர் தனது இரண்டாவது படமான ஆடுகளம் மூலமாக தேசிய விருதை தட்டி சென்றார். அதன் பிறகு கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படமும் இதே போல் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டது.

இது குறித்து அண்மையில் சினிமா மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி அவர்கள் ஒரு நேர்காணல் குறிப்பிடுகையில், ‘முன்பெல்லாம் விருது என்பது சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. அந்த விருது கமிட்டியில் யாரெல்லாம் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த மாதிரியாக கவனித்தால் நான் விருதை பெற்று கொள்ளலாம், என்று யோசிக்க ஆரம்பித்து அப்படித்தான் தற்போது பல்வேறு விருதுகள் வாங்கப்படுகின்றன. எந்த விருதும் கொடுக்கப்படவில்லை.’

இதையும் படியுங்களேன் – ஆஸ்கர் அகாடமியில் சூர்யா என்ன வேலை செய்ய போகிறார் தெரியுமா.?! வெளியான உண்மை தகவல்…

‘இதில் வெற்றிமாறன் மட்டும் விதிவிலக்கு அல்ல. அதை வெளிப்படையாக சொல்வதற்கு எந்த அச்சமும் இல்லை எனக்கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்து விட்டார்.’ பத்திரிக்கையாளர் பிஸ்மி. இதனை பார்த்த நெட்டிசன்கள் அப்போ வெற்றிமாறன் தேசிய விருது வாங்கியது கூட காசு கொடுத்து தான் வாங்கினாரா என்று இணையத்தில் சிலாகிக்க ஆரம்பித்து விட்டனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top