பொதுவெளியில் வியாக்கானம்!.. இதெல்லாம் பாக்கமாட்டாரா வெற்றிமாறன்?..
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருந்து வருகிறார் வெற்றிமாறன். தனுஷுக்கு என்றே படைக்கப்பட்ட ஜீவன் என்பது மாதிரி தொடர்ந்து 4 படங்களை தனுஷை வைத்து எடுத்து மாபெரும் ஹிட் கொடுத்தவர் தான் வெற்றிமாறன். அதற்கு கைமாறாக தனுஷும் பல மேடைகளில் வெற்றிமாறனை பற்றி பேசாத நாள்களே இல்லை.
மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாக சில தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நீண்ட நாள்களாக மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
சூரி இந்த படத்தில் போலீஸாகவும் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். படத்தை பற்றி ஆரம்பத்தில் பேட்டி கொடுத்த வெற்றிமாறன் வெறும் 4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தற்போது 40 கோடி வரை எட்டியுள்ளது என்று கூறினார்.
40கோடி பட்ஜெட் என்றால் மிகப்பெரிய பட்ஜெட் படம் தான் இப்போதைய சூழ் நிலைக்கு. ஆனால் அதில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும் தினப்படி சம்பளமாக 500 ரூபாய் கொடுப்பது வழக்கம். சம்பளம் போக தினப்படி 500 ரூபாய். ஆனால் விடுதலை படத்தில் வேலை பார்த்த ஊழியர்களுக்கு தினப்படியாக வெறும் 100 ரூபாயை கொடுத்திருக்கின்றனர்.
இது வெற்றிமாறனுக்கு தெரியுமா? இல்ல தெரியாதா ? என்ற கேள்விகள் எழுந்தாலும் அதெப்படி தெரியாமல் இருக்கும் என்ற கருத்தும் பரவி வருகிறது. பொது வெளியில் நியாயத்தை பேசும் வெற்றி மாறன் தன் யுனிட்டிற்குள்ளேவே இப்படி ஒரு அநியாயம் நடந்தும் கண்டு கொள்ளாமலா இருக்கிறார் என்று பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க : ரஜினியின் கடைசி படம் இதுதானா?.. பெரிய அளவில் உருவாக்க ரஜினி போடும் பக்கா மாஸ்டர் ப்ளான்!..